புளியை ஏன் சாப்பிட கூடாது
டாக்டர். யோகேஷ் அவர்கள் யாரெல்லாம் புளியை சாப்பிட கூடாது மற்றும் ஏன் சாப்பிட கூடாது என்பதை நமக்கு கூறுகிறார். இவர் பாட்னாவிலுள்ள NMCH மருத்தவமனையில் பணி புரிகிறார். நீங்களும் உங்கள் தினசரி உணவில் புளியை சாப்பிடுகிறீர்கள் என்றால் நிச்சயம் இந்த கட்டுரையை முழுமையாக படிக்க வேண்டும்.
பற்கள் சம்பந்தமான உபாதைகள் உள்ளவர்கள் சாப்பிட கூடாது.
பற்கள் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் தினசரி உணவில் புளியை சேர்த்து கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் இப்பொழுதில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
ஒவ்வாமை
அதிகப்படியான புளியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஒவ்வாமை ஏற்படும். இது போன்ற சமயத்தில் அரிப்பு, வீக்கம், தலை சுற்றல் போன்ற அபாயங்கள் அதிகரிக்கும். நீங்கள் உணவில் அதிக அளவில் புளியை பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் இன்று முதல் அதை கொஞ்சம் குறைக்க முயற்சி செய்யுங்கள். குறிப்பாக பச்சையாக சமைக்காத புளியை தொடவே கூடாது.
செரிமான பிரச்சினைகள் உள்ளவர்கள் புளியை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு அஜீரண கோளாறுகள் இருக்கும் பட்சத்தில் புளியை தவிர்க்க வேண்டும். அப்படி புளியை சாப்பிட்டால், வயிற்று உப்புசம் உண்டாகும். முக்கியமாக ஏற்கனவே வயிறு சம்பந்தமான உபாதைகள் உள்ளவர்கள் முடிந்த வரை புளியை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.
இதுவும் உதவலாம்:குளிர் காலத்தில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு 1 பல் பூண்டு போதும்!!
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation