Right Dinner Time : உடல் எடையை குறைக்க இரவு உணவை இந்த நேரத்தில் சாப்பிடுங்க!

வளர்ச்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இரவு உணவை சீக்கிரமாக சாப்பிட வேண்டும். இது கலோரிகளை எரிக்கவும், எடையை பராமரிக்கவும் உதவும்…

eating early before sunset at night

Benefits of Eating Dinner Early : உங்களுடைய உடல் எடை வேகமாக அதிகரிக்கிறதா? குறைவாக சாப்பிட்டாலும் உடல் எடை கூடுகிறதா? இரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதும் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா? பெரும்பாலானவர்கள் இரவு உணவை 9-10 மணிக்கு தான் சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமின்றி பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்பட தொடங்குகின்றன.

இரவு உணவை சாப்பிடுவதற்கான சரியான நேரம் எது என்பதையும், சரியான நேரத்தில் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் ஊட்டச்சத்து நிபுணரான பிரியங்கா ஜெய்ஸ்வால் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

சூரிய அஸ்தமனத்திற்கு முன் இரவு உணவு சாப்பிடுவது நல்லதா?

walking benefits after early dinner

இரவு உணவு சாப்பிட்ட உடனே தூங்கச் செல்வது மிகவும் தவறானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி நல்ல தூக்கத்தையும் பெற உதவுகிறது. அதேசமயம் ஒருவர் இரவு உணவை தாமதமாக எடுத்துக் கொள்ளும் பொழுது நடை பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவது கடினமாக இருக்கலாம். இதனுடன் உடனே தூங்க செல்வதால் செரிமானமும் பாதிக்கப்படுகிறது. உணவு சரியாக ஜீரணிக்கப்படாவிட்டால் அது கொழுப்புகளாக உடலில் சேர்ந்து விடும். அது மட்டும் இன்றி, இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதால் வளர்ச்சிதை மாற்றம் சரியாக நடைபெறாது. இதனால் கலோரிகளை எரிப்பது கடினமாகலாம். இந்த காரணங்கள் யாவும் உடல் பருமனுக்கு வழி வகுக்கின்றன.

நிபுணரின் கூற்றுப்படி இரவு உணவை தாமதமாக சாப்பிடும் பொழுது அது தூக்கத்தையும் பாதிக்கிறது. குறைவான தூக்கம் காரணமாக கார்டிசோல் ஹார்மோன்களும் அதிகரிக்கின்றன. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இது போன்ற ஹார்மோன்களால் ஜங்க், இனிப்பு அல்லது சிற்றுண்டிகள் மீதான விருப்பம் அதிகரிக்கும். இதனால் உணவு உட்கொள்ளலின் அளவுகளும் கணிசமாக அதிகரிக்க தொடங்குகின்றன.

இரவு உணவை சாப்பிடுவதற்கான சரியான நேரம் எது?

dinner time for weight loss

  • மாலை 6-8 மணிக்குள் அல்லது தூங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு சிலருக்கு மாலை நேரத்தில் உணவு உண்பது சற்று கடினமாக இருக்கலாம். இத்தகைய சூழலில் தூங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக இரவு உணவை சாப்பிட முயற்சி செய்யலாம்.
  • இரவு உணவிற்கு குறைந்த கலோரியின் உடைய, எளிதாக ஜீரணிக்க கூடிய மிதமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
  • இரவு உணவிற்கு பிறகு குறைந்தது அரை மணி நேரம் அல்லது 20 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்யலாம். இது உங்களுடைய செரிமான செயல்முறையை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி நல்ல தூக்கத்திற்கும் வழி வகுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: வெயிட் லாஸ் செய்ய இது தாங்க பெஸ்ட் டீ!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP