Waist Fat Loss : இடுப்பு கொழுப்பை குறைப்பது இவ்வளவு ஈஸியா! சிறந்த பலன் தரும் 2 யோகாசனங்கள்!

சரியான டயட் கொஞ்ச நேரம் யோகா, இது போதுமே! தொப்பை, இடுப்பு கொழுப்பு எல்லாம் சும்மா வெண்ணெய் மாதிரி கரைந்துவிடும்…

waist fat loss yoga asanas

இடுப்பு சதை குறைய யோகா : " பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன், அடடா பிரம்மன் கஞ்சனடி ". 80's, 90's கிட்ஸ்களுக்கு இந்த பாட்டு கண்டிப்பா தெரிஞ்சு இருக்கும். அந்த டைம்ல நாம ஸ்கூல், காலேஜ் படிக்கிறப்போ எல்லாம் இந்த பாட்டு கேட்குறப்போ நமக்காகவே எழுதுன மாதிரி தோணும். ஒல்லியா இருந்தாலும் இந்த மாதிரி பாட்டு கேட்டா செம குஷி ஆகிரும். அப்படி இருந்த இடுப்பு திருமணம், குழந்தைகள் என ஆன பிறகு மெல்லிடையாகவே இருப்பது ரொம்ப கஷ்டம் தான். கஞ்சனான பிரம்மன் இப்போது தாராள பிரபு ஆகிவிட்டார்.

தவறல்ல வயது கூடும் பொழுது இது போன்ற மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையான விஷயம் தான். தாய்மை தந்த பரிசு இது, ஆனால் இந்த பரிசை நம்முடனே வைத்துக்கொண்டால் அது ஆபத்தை விளைவிக்கும். இடுப்பு, மற்றும் வயிற்றை சுற்றி உள்ள பகுதியில் கொழுப்பு சேர்வது பல உடல் நல பிரச்சனைகளை குறிக்கிறது. எனவே குழந்தை பிறந்த சில மாதங்கள் அல்லது 1 வருடம் கழித்து கண்டிப்பாக உடலை குறைத்து ஃபிட் ஆக இருக்க முயற்சி செய்வோம். இதற்கு உதவக்கூடிய இரண்டு யோகாசனங்களை சர்வதேச யோகா பயிற்சியாளரான தில்ராஜ் ப்ரீத் கவுர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

இடுப்பு சதை குறைய பாலாசனம் ( Child Pose )

waist fat loss balasana

  • இந்தத் தோரணையானது குழந்தை குப்புறப்படுத்து இருப்பதை போன்ற நிலையில் இருப்பதால் "child pose " என்று அழைக்கப்படுகிறது.
  • பாலாசனம் செய்வதற்கு முதலில் முட்டி போட்டு தரையில் உட்கார வேண்டும்.
  • பின்பு மூச்சை உள்ளிழுத்து உங்கள் இருகைகளையும் மேலே தூக்கவும்.
  • இப்போது மூச்சை வெளியிடும் பொழுது, மேல் உடலை வளைத்து கைகளை தரையின் மீது வைக்க வேண்டும்.
  • இடுப்பை குதிகால்கள் மீது வைத்து உட்காரவும்.
  • இந்த பயிற்சியை செய்யும்பொழுது நெற்றி தரையை தொட வேண்டும் மற்றும் முதுகை வளைக்காமல் நேராக வைக்க வேண்டும்.

இடுப்பு சதை குறைய புஜங்காசனம் (Cobra Pose )

waist fat loss bujangasana

  • இந்த யோகாசன பயிற்சியை ஆங்கிலத்தில் "Cobra Pose" என்று அழைக்கிறார்கள்.
  • புஜங்காசனம் செய்வதற்கு முதலில் யோகா மேட்டில் குப்புற படுத்து, கால்களை நேராக இணைத்து வைக்க வேண்டும்.
  • உங்களுடைய இரு உள்ளங்கைகளையும் மார்புக்கு அருகில் வைத்துக்கொள்ளவும்.
  • இப்போது மூச்சை உள்ளிழுத்து தலை, மார்பு மற்றும் கழுத்து பகுதியை மேலே உயர்த்தி, உடலை பின்னோக்கி வளைக்க வேண்டும்.
  • புஜங்காசனம் செய்யும் பொழுது மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, பின்னர் வெளியிட வேண்டும்.
  • இந்த தோரணையில் 30 வினாடிகள் வரை இருக்கவும், பின்பு இயல்பு நிலைக்கு திரும்பலாம். இந்த யோகாவை சில நாட்கள் பழகிய பிறகு நேரத்தை கணிசமாக அதிகரித்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஆல் இன் ஆல் அழகு ராணியாக மாற விளக்கெண்ணெய் போதும்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP