நீங்கள் ஒரு டீ பிரியராக இருந்தால் ஒரு முறை இந்த துளசி டீயையும் முயற்சி செய்து பாருங்கள். துளசி ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாகும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த துளசி இலைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய் தொற்றுகளை தடுக்கவும் உதவுகின்றன.
துளசி இலைகளை மென்று சாப்பிடலாம் அல்லது டீ வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் துளசி இலை எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இடுப்பு கொழுப்பை குறைப்பது இவ்வளவு ஈஸியா! சிறந்த பலன் தரும் 2 யோகாசனங்கள்!
துளசி உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். வளர்ச்சிதை மாற்றம் சீராக இருந்தால் எடை இழப்பு எளிதாகும். இந்நிலையில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் துளசி டீயை குடித்து பயன்பெறலாம். இது கொழுப்பை வேகமாக எரிக்க உதவும்.
துளசி டீ உடல் எடையை குறைக்க சிறந்தது. கலோரிகளை வேகமாக எரிக்க தினம் ஒரு கப் துளசி டீயை எடுத்துக்கொள்ளலாம். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சிறப்பாக இருக்கவும் துளசி டீயை குடிக்கலாம்.
துளசி டீ யில் நிறைந்துள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பதட்டத்தை குறைத்து மனதை அமைதி படுத்த உதவுகின்றன. இதை குடிப்பதால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி பெறும்.
கல்லீரலின் என்சைம்கள் உற்பத்தி அதிகரிக்கும் பொழுது கல்லீரல் பாதிக்கப்படலாம். இந்நிலையில் என்சைம்களின் உற்பத்தியை கட்டுக்குள் வைத்திருக்கவும், கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் துளசி இலை டீயை எடுத்துக் கொள்ளலாம்.
சிறுநீர் மற்றும் மல இயக்கத்தை சீராக வைத்துக்கொள்ள துளசி இலை டீ யை எடுத்துக் கொள்ளலாம்
சளி, மூக்கடைப்பு மற்றும் நெஞ்சு சளியை போக்க துளசி சாறு, கஷாயம் அல்லது டீயை எடுத்துக் கொள்ளலாம். ஆயுர்வேதத்தின்படி, சளி பிரச்சனையிலிருந்து உடனடி நிவாரணம் பெற துளசி இலைகள் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை மென்று சாப்பிட்டு வர சளி உட்பட பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் துளசி இலை டீ எடுத்துக் கொள்ளலாம். இதை குடித்து வர இதய நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் 8 விதமான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஜாதிக்காய் எண்ணெய்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]