Weight loss diet plan: ஒரே மாதத்தில் 5 கிலோ வரை உடல் எடையைக் குறைப்பதற்கான டிப்ஸ்!

உடல் எடையைக்குறைப்பில் இருந்தால் நீங்கள் பால் கலந்த பானங்களைப் பருகக்கூடாது. 

women weight loss

மழைக்காலங்களில் உடல் எடையைக்குறைக்க வேண்டும் என்று நினைத்தாலும், வானிலை நமக்கு ஒத்துழைக்காது. மழையின் காரணமாக வெளியில் செல்ல முடியாமல் வீட்டிற்கு உள்ளே இருப்பதால் நொறுக்குத்தீனிகளைத் தான் அதிகளவில் சாப்பிடுவோம். இதனால் உடல் எடையைக்குறைக்கும் முயற்சியில் இருந்தாலும் எந்த ரிசல்ட்டும் நமக்கு கிடைக்காது.

இதுப்போன்ற நிலையை எண்ணிக்கவலை வேண்டாம். இந்த பருவமழையில் உடல் எடையை 5-6 கிலோ வரை குறைக்க வேண்டும் என்ற திட்டம் இருந்தாலும்? தயக்கம் இல்லாமல் இப்பவே தொடங்கிவிடுங்கள். இதோ உங்களுக்காகவே இந்த பிரத்யேகமாக டயட் ப்ளாண்.

weight loss diet plan

காலை உணவு:

  • காலை நேர உணவுகளை ஒரு போதும் நீங்கள் மிஸ் பண்ணக்கூடாது. நாள் முழுவதும் உங்களை சோர்வடையால் வைத்திருக்க காலை உணவு தான் உதவியாக இருக்கும். நீங்கள் 8.30 மணிக்குள் உங்களது காலை உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.
  • இட்லி,தோசையாக இருந்தால் அளவாக சாப்பிடவும். இல்லையென்றால் ஓட்ஸ் கஞ்சி, உங்களுக்குப்பிடித்த பழங்கள், காய்கறிகளை சாலட்டாக நீங்கள் சாப்பிடலாம்.
  • ஒருவேளை உங்களுக்கு காலை 11 மணிக்கு மேல் பசி உணர்வு ஏற்பட்டால் பொரிகடலை, அவுல் போன்ற ஊட்டச்சத்துள்ள ஸ்நாக்ஸ்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

மதிய உணவு:

வேலையில் பிஸியாக இருந்தாலும் உங்களுடைய மதிய உணவு 1-2 மணிக்குள் கண்டிப்பாக இருக்க வேண்டும். நீங்கள் கொஞ்சமாக சாப்பாடு மற்றும் போதுமான அளவிற்கு காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த சாலட்டுகளையும் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு நீண்ட நேரத்திற்குப் பசி உணர்வை ஏற்படுத்தாது. மறக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் டயட் ப்ளாண் முற்றிலும் கெட்டுவிடும்.

green tea  diet...

மாலை நேர சிற்றுண்டி:

  • நம்மில் அனைவருக்கும் மாலை நேரத்தில் டீ அல்லது காபி சாப்பிட வேண்டும் என்று தான் நினைப்போம். உடல் எடையைக்குறைப்பில் இருந்தால் நீங்கள் பால் கலந்த பானங்களை பருகக்கூடாது.
  • அதற்கு மாறாக நாட்டு சர்க்கரைக் கலந்த கடும் டீ, மசாலா டீ யை நீங்கள் பருகலாம்.
  • வறுத்த கடலை, முந்திரி போன்ற நட்ஸ்களைச் சாப்பிடுங்கள். எண்ணெய் பலகாரங்கள், பேக்கரி பொருள்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

இரவு உணவு:

  • தினமும் இரவு 7 மணிக்குள் உங்களுடைய இரவு நேர டிப்பன் இருக்க வேண்டும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த பெர்ரி- புதினா ஸ்மூத்தி, செர்ரிப்பழ ஸ்மூத்தி, பழங்கள் மற்றும் கீரைகள் ஸ்மூத்தியை சாப்பிடலாம்.
  • இட்லி,தோசை, சப்பாத்திகளைச் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் 3 அல்லது 4 சாப்பிடுங்கள். அதுவும் நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.

உறக்க நேரம்:

இரவில் 7 மணிக்குள் சாப்பிடுவதால் நிச்சயம் பசி உணர்வு இருக்கும் என்பதால் தூங்குவதற்கு முன்னதாக, ஒரு கப் க்ரீன் டீ குடிக்கவும். இது நாள் முழுவதும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவியாக இருக்கும். மேலும் முழு உடலையும் சுத்தப்படுத்த உதவுவதோடு, நல்ல தூக்கத்தையும் உங்களுக்குக் கொடுக்கும்.

மேலும் படிக்க:இரவு ஏழு மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டால் மிகவும் நல்லது!

இதுப்போன்ற நடைமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே போதும் ஒரே மாதத்தில் கட்டாயம் 5 கிலோ வரை உடல் எடையைக் குறைக்க முடியும். இனி ஏன் தாமதம்.. இப்போதே இந்த டயட் ப்ளாணை யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுங்க…

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP