herzindagi
Main salt

தினமும் எட்டு கிராம் உப்பு உட்கொள்வது ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவ ஆய்வு

சூடு சுரணைக்கு உப்பு உட்கொள்வது அவசியம் தான். ஆனால் ஐந்து கிராமிற்கு மேல் சென்றால் உயிருக்கே ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
Editorial
Updated:- 2023-12-12, 22:10 IST

மனிதர்கள் தினமும் ஐந்து கிராமிற்கும் குறைவாக உப்பு உட்கொள்ள வேண்டும் இல்லையெனில் அது உடலில் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் தினமும் எட்டு கிராம் உப்பை உட்கொள்வதாகத் தகவல் கிடைத்துள்ளது. தினமும் ஐந்து கிராமிற்கு குறைவாக உப்பு உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தி இருக்கிறது. எனவே நீங்கள் உப்பு உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக உப்பு உட்கொண்டால் என்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை இங்கே பகிர்ந்துள்ளோம்.

மேலும் படிங்க பாட்டி வைத்தியம் : இருமலை விரட்டியடிக்கும் இஞ்சி தண்ணீர்!

உயர் இரத்த அழுத்தம்

 salt

அதிகமாக உப்பு உட்கொண்டால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இதற்கு உப்பில் உள்ள சோடியமே முழு முதற்காராணம். இது இறுதியில் இருதய நோய்களுக்கான காரணியாக அமைந்து விடும்.

சிறுநீரக பாதிப்பு

அதிகமாக உப்பு உட்கொண்டால் பல முக்கிய உறுப்புகளில் தேவையற்ற அழுத்தம் ஏற்படும். இதனால் ஒட்டுமொத்த சிறுநீரக செயல்பாடும் குறைந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு ஏற்படும் என்பதால் சிறுநீரக பாதிப்பை உடனடியாகக் கண்டறிவதும் சிரமம்.  

தலைவலி 

 salt

சிலருக்கு அடிக்கடி தலைவலியும் ஏற்படும். உப்பு உங்களின் இரத்த ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தலைவலி ஏற்படுகிறது. உப்பில் இருக்கும் சோடியத்தின் தாக்குதலைச் சமாளிக்க உங்களின் உடல் போராடுகிறது என்பதற்கான எச்சரிக்கையாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிங்க சளி, இருமல் தொல்லைக்கு உடனடி தீர்வளிக்கும் பாட்டி வைத்தியம்!

நீரிழப்பு

அதிகப்படியான உப்பு  உட்கொள்ளல் உடலில் நீரிழப்புக்கு வித்திடும். ஏனென்றால் உப்பின் தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு செல்களில் இருந்து தண்ணீரை உறிஞ்ச உடல் முயற்சிக்கும். அதே நேரம் உங்களுக்குத் தண்ணீர் தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]