வேகமா எடை குறைக்க ஆரோக்கியமான ஆளி விதையை உணவில் சேர்க்கும் வழிகள்

ஆளிவிதைகள் சத்தான கூறுகளாகும், உணவில் நார்ச்சத்து சேர்த்துக்கொள்ள விரும்பினாலும் நல்ல பலனை தரக்கூடியது. ஆளிவிதைகள் உடல் எடையைக் குறைக்க எப்படி சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்
image

ஆளி விதைகள் ஆரோக்கியமான உணவு பழக்கத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆளி விதைகளை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் மக்களுக்குத் தெரியாது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது முதல் மலச்சிக்கலைத் தடுப்பது வரை, இந்த ஒரு மூலப்பொருள் ஒவ்வொரு சுகாதார நிபுணராலும் ஊக்குவிக்கப்படுகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் நீங்கள் சிரமப்பட்டிருந்தால், அடிக்கடி அஜீரணத்தைக் கண்டால் அல்லது மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறிகளைச் சமாளிப்பது கடினமாக இருந்தால், ஆளி விதைகள் இந்த நிலைமைகளுக்கு உங்களுக்கு உதவும். இந்த குளிர் காலம் பண்டிகைக் காலத்தை எதிர்நோக்கத் தயாராகி வருவதால், உங்கள் உணவில் சில ஆரோக்கியமான கூறுகளைச் சேர்ப்பது மிகவும் முக்கியம். இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாமல் பல வகையான உணவுகளை ருசிக்கலாம். ஆளி விதைகள் சாப்பிடுவதால் நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும், உடல் எடையும் வெகுவாக குறையும்.

ஸ்மூத்திகளில் ஆளிவிதைகளைச் சேர்க்கலாம்

நீங்கள் ஸ்மூத்தி சாப்பிடும் ஆர்வம் இருந்தால் ஆளி விதைகளை ஊறவைத்து சேர்த்துக்கொள்ளலாம், உங்களுக்கு அப்படி சாப்பிட பிடிக்கவில்லை என்றால் பொடி செய்து அதை கலந்து குடிக்கலாம். இப்படி எடுத்துக்கொள்ளுவதால் பசியைத் தடுக்கவும், எடையைக் குறைக்கவும் உதவும்.

அதே விலையில் ஆளி விதைகள் அஜீரணத்தை மேம்படுத்த உதவுகிறது. அஜீரண பிரச்சனை இருப்பவர்கள் எளிதில் எடை குரைக்க முடியது. ஏனெனில் நம்மில் பெரும்பாலோர் எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை உட்கொள்கிறோம். இது குடல் செயல்பாட்டை சீராக்கி மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். ஆனால் ஒரு கிளாஸ் சுவையான, நார்ச்சத்து நிறைந்த ஆளிவிதை ஸ்மூத்தி குடிப்பதால் மலத்தை எளிதாக வெளியேற்ற உதவும். இந்த விதைகளை மோரில் சேர்த்து குடிக்கலாம்.

smoothy

Image Credit: Freepik


பேக்கிங் உணவுகளில் முட்டைக்கு பதிலாக ஆளிவ் விதைகளை சேர்க்கலாம்

பண்டிகை காலங்களில் பலர் முட்டை கலந்த கேக் மற்றும் பேக்கிங் பிஸ்கெட் போன்று சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள், இருப்பினும் இது போன்ற உணவில் புரதத்தை சேர்க்கக்கூடிய சப்ளிமெண்ட் தேவை. இந்த பேக்கிங் உணவுகளை தயாரிக்கும் போது முட்டை ஒரு பிணைப்பு முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் முட்டைக்கு பதிலாக ஆளி விதைகளைப் பயன்படுத்தலாம். ஒரு பெரிய கிண்ணத்தில், ஆளிவிதை மற்றும் தண்ணீரை 1:3 என்ற விகிதத்தில் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். இதை கேக், பஜ்ஜி அல்லது கப்கேக் மாவில் சேர்க்கலாம். முட்டையில்லா பேக்கிங் உணவுகள் தயார்.

ஆளிவிதைகளை சாலட்களில் சேர்க்கவும்

சாலடுகள் சுவையானவை, ஆரோக்கியமானவை, ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை. காய்கறிகள் மற்றும் பழங்களின் இயற்கையான சுவையைத் தவிர, புளிப்பு, காரம் மற்றும் இனிப்பு சுவைகளின் சரியான சமநிலையைக் கொண்ட ஒரு சிறந்த உணவாகும். மேலும் உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும். சாலட்டின் சுவையை அதிகரிக்க இதில் ஆளிவிதைகளை சேர்க்கலாம். உங்கள் எடையை சீராக வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்றால் ஆளிவிதைகளுடன் கூடிய சாலட் இரவு ஒரு சிறந்த வழி.

saladImage Credit: Freepik

சைலியம் உமி பானத்தில் ஆளிவிதைகளைச் சேர்க்கலாம்

சைலியம் உமி என்பது ஒரு வகை நார்ச்சத்து, பெரும்பாலும் மலமிளக்கியாக உட்கொள்ளப்படுகிறது. இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கொழுப்பின் அளவை மேம்படுத்துகிறது. சைலியம் உமி மற்றும் ஆளிவிதைகளைச் சேர்ப்பதன் மூலம் இரண்டு பொருட்களின் அதிகபட்ச நன்மைகளைப் பெறலாம். வீக்கத்தைக் குறைக்க இது ஒரு நல்ல கலவையாக இருக்கும். இந்த பானம் உடல் எடையை குறைக்க நல்ல பலனை தரக்கூடியது.

ஆளி விதைகளை உணவில் சேர்க்கும்போது செய்யக்கூடாத விஷயங்கள்

  • விதைகளை அதிகமாக சூடாக்குவதைத் தவிர்க்கவும்
  • ஆளி விதைகளை வறுப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது நல்ல கொழுப்பை உடைக்கும்
  • நீங்கள் எப்போதும் ஆளி விதைகளைத் தூள் வடிவில் ஃப்ரீசரில் சேமிக்க வேண்டும்.

மேலும் படிக்க: குளிர்பானத்தை விரும்பி குடிக்கும் நபர்களாக இருந்தால் இந்த பக்க விளைவுகளை தெரிஞ்சிக்கோங்க


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

https://gbsfwqac.top/tamil/diet-nutrition/side-effects-of-drinking-cold-drinks-article-1011750

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP