herzindagi
image

ஒருவர் அடித்து போட்டது போல் தசைகள் மற்றும் உடலில் வலி இருந்தால் இந்த வைத்தியம் கைகொடுக்கும்

இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரும் உடல் மற்றும் தசை வலியைப் பற்றி புகார் கூறுகிறார்கள். உங்கள் உடல் மற்றும் தசை வலியைப் போக்கும் அத்தகைய வீட்டு வைத்தியங்களை முயறிசிக்கவும் கண்டிப்பாக உடல் வலிகள் அனைத்தும் பறந்தோடிவிடும்.
Editorial
Updated:- 2025-07-09, 18:09 IST

உடலிலும் தசைகளிலும் வலி ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனை. பல சமயங்களில், வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு உடல் வலிக்கத் தொடங்குகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தசை திசுக்கள் உள்ளன, இதன் காரணமாக உடலின் எந்தப் பகுதியிலும் தசை வலி தொடங்க செய்யலாம். இந்த வலி குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்த வலியைப் பற்றி நீங்கள் அதிகமாக கவலைப்படத் தேவையில்லை. சில நேரங்களில், வானிலை மாற்றத்தாலும் உடல் வலி ஏற்பட தொடங்கும்.

இது தவிர, நீண்ட நேரம் நிற்பது, அதிகமாக நடப்பது அல்லது அதிக உடற்பயிற்சி செய்வது உடலில் வலியை ஏற்படுத்துகிறது. பல நேரங்களில் தசை வலி மன அழுத்தம், விறைப்பு, நீரிழப்பு அல்லது வைட்டமின் டி இல்லாததால் ஏற்படுகிறது. இந்த வகையான வலியைப் போக்க வீட்டு வைத்தியம் சிறந்த வழி. இன்றைய கட்டுரையில், உங்கள் உடல் வலியைப் போக்கும் அத்தகைய வீட்டு வைத்தியங்களைப் பற்றி பார்க்கலாம்.

 

மேலும் படிக்க: எந்த வயதிலிருந்து பெண்கள் பிரா அணிய தொடங்கினால் சரியாக இருக்கும்

 

செர்ரி பழங்களை சாப்பிடுங்கள்

 

செர்ரிகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் தசை வலி மற்றும் உடல் வலியைக் குறைப்பதில் நன்மை பயக்கும். தினமும் செர்ரிகளை உட்கொள்வது தசை வலி மற்றும் உடல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, செர்ரி சாற்றில் அந்தோசயனின் நிறமிகள் உள்ளதால் கைகள் மற்றும் கால்களில் வலியைக் குறைக்கின்றன.

tart cherry juice

 

சூடான பொருட்களை பயன்படுத்தவும்

 

தசைகளின் விறைப்பைக் குறைக்க, சூடான ஃபோமென்டேஷன் தடவவும். இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க இது எளிதான வழி. ஃபோமென்டேஷன் தடவுவதன் மூலம் உடல் வலி குணமடையத் தொடங்குகிறது. ஃபோமென்டேஷன் செய்ய நீங்கள் ஒரு வெப்பமூட்டும் பேக்கைப் பயன்படுத்தலாம்.

 

தசை வலிக்கு இஞ்சி உட்கொள்ளவும்

 

இஞ்சியை உட்கொள்வதன் மூலம் பல பிரச்சனைகள் குணமாகும். இதில் உடல் வலி மற்றும் தசை வலியும் அடங்கும். இஞ்சியில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்பு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடல் மற்றும் தசை வலியை நீக்குகிறது. உடல் மற்றும் தசை வலியைப் போக்க இஞ்சி டீயை குடிக்கலாம்.

ginger1

வைட்டமின் சார்ந்த உணவுகளை சாப்பிடவும்

 

சில நேரங்களில் உடலில் வைட்டமின்கள் இல்லாததால் உடல் வலி ஏற்படுகிறது. வைட்டமின் பி1, ஈ மற்றும் டி குறைபாடு நாள் முழுவதும் சோர்வடையச் செய்கிறது. எனவே, அதிக அளவு வைட்டமின்கள் கொண்ட உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் உடலிலும் தசைகளிலும் வலி ஏற்படாது.

vitamin D

 

உடலுக்கு மசாஜ் செய்ய வேண்டும்

 

மசாஜ் பொதுவாக உடல் வலியைப் போக்கப் பயன்படுகிறது. மசாஜ் மன அழுத்தத்தைக் குறைத்து திசுக்களைத் தளர்த்துகிறது. மசாஜ் விறைப்பைக் குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

 

மேலும் படிக்க: உணவு பழக்கத்தில் இந்த சிறிய மாற்றத்தை செய்தால் உடல் எடை வேகுவாக குறையும்

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]