herzindagi
making happy in life

சந்தோஷத்துடன் வாழ வேண்டுமா? அப்ப இதெல்லாம் மறக்காமல் பின்பற்றுங்கள்!

<p style="text-align: justify;"><span style="text-align: justify;">உங்களது மனதை ஒருநிலைப்படுத்துவதற்காக அதிகளவு புத்தகங்களைப் படிப்பது முதல், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உங்களது உணவு முறையில் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.&nbsp;</span>
Editorial
Updated:- 2024-03-11, 20:35 IST

மகிழ்ச்சி என்பது நம்மில் அனைவரும் வாழ்க்கையில் தேடக்கூடிய ஒரு நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. ஆம் நம்மிடம் உள்ள பழக்கவழக்கங்களையெல்லாம் முறையாக பின்பற்றாமல், என்னிடம் மகிழ்ச்சி இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை என்ற புழம்பும் மக்களில் நிச்சயம் நாமும் ஒருவராக இருப்போம். மூளையின் செயல்திறனை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தால் மட்டுமே வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும். இதோ மூளையின் செயல்திறனை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதற்கான டிப்ஸ்கள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்வோம்.

secrets of happy

 மேலும் படிக்க: கோடை காலத்தில் வெள்ளரிகளை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும்?

மூளையை வலுவாக்கும் செயல்பாடுகள்:

  • கவனமுடன் இருத்தல்: வாழ்க்கையில் பல இடர்பாடுகளை அனைவரும் சந்திக்கும் சூழல் ஏற்படும். கவன சிதறல் இதற்கு முக்கிய காரணமாக அமையும் என்பதால், எப்போதும் கவனத்துடன் உங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எந்த வேலையையும் அசலாட்டாக செய்யும் அளவிற்கு உங்களிடம் பலம் கட்டாயம் இருக்க வேண்டும். குறிப்பாக பதற்றம்  இல்லாமல் கவனமுடன் இருந்தாலே எதையும் வென்றுவிட முடியும். இது உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் தரக்கூடும்.
  • நன்றியுணர்வு: வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த சூழலில் நமக்கு ஏராளமானோர் உதவுவதற்கு முன்வருவார்கள். இவற்றை நாம் ஏற்றுக்கொள்வதோடு எப்போதும் அவர்களுக்கு நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும். அதே சமயம் எந்த நேரத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்கும் போது, அவர்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு வார்த்தைகளும், பாராட்டுகளும் அவர்களது மூளையின் செயல்திறனை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
  • உடற்பயிற்சி செய்தல்: மனதிற்கு வலுவையும், மகிழ்வையும் தரக்கூடிய முக்கிய நிகழ்வுகளில் ஒன்று தான் உடற்பயிற்சி. அலுவலக வேலை, வீட்டுச்சூழலால் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைக்கவில்லையென்றாலும் குறைந்தது பத்து நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய பழகுங்கள். மேலும் தியானம் மற்றும் யோகா போன்றவற்றை மேற்கொள்ளும் போது, மனதில் எழக்கூடிய தேவையில்லாத யோசனைகளை அகற்ற முடியும்.
  • தூக்கம்: நாள் முழுவதும் மூளைக்கு வேலைக் கொடுக்கும் நாம், அதன் மீது எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை. பணிச்சுமையால் கண் முழித்து வேலைப்பார்ப்பதால் மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் எரிச்சல், மனச்சோர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். எனவே முடிந்தவரை தினமும் 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

happiest life for women

மேலும் படிக்க: உயரமாக வளரணுமா? இயற்கை முறையில் உயரத்தை அதிகரிக்க சில டிப்ஸ் இதோ!

இதே போன்று  உங்களது மனதை ஒருநிலைப்படுத்துவதற்காக அதிகளவு புத்தகங்களைப் படிப்பது முதல், நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உங்களது உணவு முறையில் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்த நடைமுறைகளையெல்லாம் உங்களது வாழ்க்கையில் தொடர்ச்சியாக மேற்கொண்டாலே எப்போதுமே மகிழ்ச்சியுடன் வாழ முடியும். அப்புறம் என்ன? இனி உங்களது வாழ்க்கை முறையில் இந்த செயற்பாடுகளையெல்லாம் மேற்கொண்டு மூளையின் செயல்திறனை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

Image source-  Google

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]