உயரம் என்பது நம்மில் பலருக்கும் தன்னம்பிக்கை, கம்பீரம் மற்றும் தனிப்பட்ட அழகைக் கொடுக்கும் ஒரு விஷயம். சிலர் தன்னை விட உயரமானவரைப் பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகவோ அல்லது தாழ்வாகவோ உணர்கிறார்கள். பொதுவாகவே 18 வயது முதல் 20 வயதில் நம் உயரம் வளர்ச்சி ஆனது நின்றுவிடும். 20 வயதிற்கு பிறகு உயரமாக முடியாது என்று கூறுவார்கள். இருந்தாலும், நம் உடலுக்குத் தேவையான அதிக சத்தான காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட நம் உடலில் உள்ள ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. எனவே இதன் மூலம் நம் உயரத்திற்கு சில அங்குலங்கள் சேர்க்கலாம்.
கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ், அயோடின், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால் உயரமாக வளரலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது தவிர இயற்கை முறையில் நம் உயரத்தை அதிகரிப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
உங்கள் தினசரி உணவில் கேரட், முட்டையின் மஞ்சள் கரு, மீன், இறைச்சி, உருளைக்கிழங்கு, பருப்புகள், பாதாம், வேர்க்கடலை, கோழி, பீன்ஸ், பழங்கள், பால் மற்றும் பால் பொருட்கள் இருக்க வேண்டும். இந்த உணவுகள் உங்கள் உயரத்தை சில இன்ச் வரை அதிகரிக்க உதவும்.
மேலும் படிக்க: புரதச்சத்து குறைபாடா ? நீங்கள் சாப்பிட வேண்டிய சைவ, அசைவ உணவுகள்
நம் எலும்புகள் வலுவாக இல்லாவிட்டாலும் உயரம் ஆக முடியாது. உங்கள் எலும்புகள் வலுவாக இருந்தால் மட்டுமே நீங்கள் உயரமாக வளர முடியும். எனவே, வலுவான எலும்புகளுக்கு கால்சியம் அதிகம் தேவைப்படுகிறது. எனவே கால்சியம் அதிகம் நிறைந்துள்ள உணவு பொருட்களான பால், முட்டை, மீன், மஷ்ரூம், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு வரலாம்.
தினமும் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது, மேலும் எலும்பு வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதனால் உங்கள் உயரத்தை நீங்கள் அதிகரிக்கலாம்.
உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள முழு தானியங்களை விட முளைத்த தானியங்கள் சிறந்தது. முளைத்த தானியங்களில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இந்த புரதம் உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் இது உயரத்தையும் கூட்டுகிறது.
யோகா மூலம் உயரத்தை அதிகரிக்க சிறு வயதிலேயே பயிற்சி செய்ய துவங்கினால் குழந்தைகள் உயரமாக வளர பெரிதும் உதவும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் நம் உடலில் உள்ள வளர்ச்சி ஹார்மோனை பாதிக்கும். ஆனால் நீங்கள் யோகா பயிற்சி செய்யும் போது, நீங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு உள் அமைதியைப் பெறுவீர்கள். யோகா பயிற்சி செய்வது தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தி உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இளமையில் ஓடுவதையும், விளையாடுவதையும் விட்டுவிட்டு, தொடர்ந்து உடலுழைப்பு இல்லாத வேலைகளில் ஈடுபடுவது உடல் சோம்பலுக்கு வழிவகுக்கும். இதனால் நாம் ஒரு சாய்ந்த நிலையில் கூன் போட்டு உட்காருவோம். இது நம் எலும்பு வளர்ச்சியைத் தடுத்து வளர்ச்சியைத் தடுக்கிறது.
சூரிய ஒளியில் இருந்து நமது உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. இந்த வைட்டமின் டி நம் எலும்பு வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காலை 8 மணிக்கு முன் இருக்கும் சூரிய ஒளி உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஸ்கிப்பிங் செய்வது உங்கள் உயரத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். ஒரு நாளைக்கு 30-50 முறை ஸ்கிப்பிங் குதிப்பது உயரமாக வளரவும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழி. இது எடை இழப்புக்கும் உதவுகிறது. ஆனால் 30 வயதை தாண்டிய பெண்கள் ஸ்கிப்பிங் செய்வது கருப்பை ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]