Planning Pregnancy with PCOS : 30 வயதிலும் கருத்தரிக்காலம், PCOS உள்ள பெண்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ்!

PCOS இனி கருத்தரிக்க தடையாக இருக்காது. 30 வயதில் கருவுற திட்டமிடும் பெண்களுக்கான சில எளிய குறிப்புகளை இன்றைய பதிவில் காணலாம். 30 வயதில் ஆரோக்கியமாகக் கருத்தரிக்கலாம்…

pcos plan for pregnancy expert tips

பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PCOS) என்பது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு வாழ்க்கை முறை பிரச்சனையாகும். இந்த பிரச்சனை உள்ள பெண்களும் கண்டிப்பாக தாயாகலாம். PCOS பிரச்சனை இருந்தால் கரு தங்க தாமதம் ஆகுமா? 30 வயதிற்குப் பிறகு கருத்தரிக்க முடியுமா? இந்த சந்தேகம் PCOS உள்ள பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும். இந்த கேள்விகளுக்கான் விடையை டாக்டர் அஸ்வதி நாயர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் பெரும்பாலான பெண்களும் PCOS பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். PCOS உள்ள அனைத்து பெண்களுக்கும் நீர் கட்டிகள் இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஒரு சிலருக்கு நீர் கட்டிகள் இருக்கலாம் மற்றும் இதன் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம்.

PCOS உள்ள பெண்கள் 30 வயதிற்கு பிறகு கருத்தரிக்க முடியுமா?

pcos plan for pregnancy tips

30 வயதிற்கு பிறகு கருத்தரிப்பது கடினம் என்பது கட்டுக்கதையே. ஒரு சில பெண்களால் 30 வயதிற்கு பிறகும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். ஆனால் 35 வயதிற்கு பிறகு முட்டையின் தரம் மற்றும் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. வயது கூடும் பொழுது கருமுட்டைகளின் எண்ணிக்கைகளும் குறைய தொடங்குகின்றன. இந்நிலையில் PCOS உள்ள பெண்கள் கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் மாதவிடாய் சுழற்சி மற்றும் ஓவுலேஷன் நாட்களை முறையாகக் கண்காணிப்பதன் மூலம் கருத்தரிப்பது சுலபமாகும். மேலும் PCOS இன் அறிகுறிகளை சமாளிக்கவும், கருவுறுதல் திறனை மேம்படுத்தவும் மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

30 வயதிற்குப் பிறகு கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்?

30 வயதிற்கு பிறகும், ஆரோக்கியமான முறையில் கருத்தரிக்க நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த குறிப்புகளை பின்பற்றலாம். இது PCOS உள்ள பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்

உங்கள் கருவுறுதல் திறனை மேம்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். உடல் எடையைப் பராமரிப்பதில் தொடங்கி தினசரி உடல் செயல்பாடுகள் வரை அனைத்து விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். குறைந்த கலோரி உடைய PCOS டயட், நல்ல தரமான தூக்கம், மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், தினசரி உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

ஓவுலேஷன் நாளை கணக்கிடவும்

pcos planning for pregnancy

கரு தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க ஓவுலேஷன் நாட்களை முறையாக கணக்கிட வேண்டியது அவசியம். உடலின் வெப்பநிலை, வெள்ளைப்படுதலில் மாற்றம், ஓவலேசன் கிட் அல்லது ஒரு சில மொபைல் அப்ளிகேஷன் மூலம் உங்களுடைய ஓவுலேஷன் நாளை கணிக்கலாம்.

எப்போதும் பாசிட்டிவாக இருங்கள்

கருத்தரிக்க உங்கள் மனநிலையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். மனதில் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவரின் கருத்துக்களுக்கும், காயப்படுத்தும் பேச்சுகளுக்கும் செவி சாய்க்காமல் எப்போதும் பாசிட்டிவ் ஆக இருக்க முயற்சி செய்யுங்கள். பிடித்த விஷயங்களை செய்து மன அழுத்தத்தை விரட்டிடுங்கள்.

மருத்துவ நிபுணரை அணுகவும்

உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால் அல்லது கருவுறுதலில் பிரச்சனைகளை சந்தித்தால் நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம். இதற்கு பதிலாக யோகா, அக்குபஞ்சர், மூலிகை மருத்துவம் போன்ற மருத்துவ முறையையும் பின்பற்றலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடலின் அனைத்து உறுப்புகளையும் பலப்படுத்தும் முந்திரி பழம் பற்றி தெரியுமா!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP