herzindagi
treatment for breast cancer

Breast Cancer: மார்பக புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள்

<p style="text-align: left;"><span style="text-align: justify;">சராசரியாக 28 பெண்கள் இருந்தால் அதில் ஒருவருக்காவது மார்பக புற்றுநோய் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்</span>
Editorial
Updated:- 2024-01-19, 21:05 IST

பெண்களை சத்தம் இல்லாமல் பாதிக்கும் கொடிய நோய்களில் ஒன்றாக உள்ளது மார்பக புற்றுநோய். சராசரியாக 28 பெண்கள் இருந்தால் அதில் ஒருவருக்காவது மார்பக புற்றுநோய் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்தளவிற்கு சைலன்ட் கில்லராக மருத்துவத்துறையில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது மார்பக புற்றுநோய் பாதிப்பு.  ஆரம்ப கட்டத்தில் புற்றுநோய் பாதிப்பை அறிந்துக் கொள்வதில் சிரமம் என்றாலும் சில அறிகுறிகள் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை நமக்கு எடுத்துரைக்கிறது. இதோ அந்த அறிகுறிகள் என்னென்ன? பெண்கள் சுயமாக எப்படி பரிசோதனை செய்துக்கொள்வது? என்பது குறித்த விபரங்களை இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

Risk for breast cancer

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:

  • மார்பக புற்றுநோய் எனக்கு ஏற்படாது, இருக்காது என்ற மனநிலையை முதலில் மாற்ற வேண்டும். 30 வயதைக் கடந்து விட்டாலே உடல் சோர்வு, பலவீனம் ஏற்பட்டால் கவனிப்பு முக்கியம்.
  • மார்பக புற்றுநோயின் அறிகுறிகளில் முக்கியமானது மார்பகத்தில் கட்டி. நம்மை அறியாமலேயே சில நேரங்களில் மார்பகத்தில் கட்டிகள் வளரக்கூடும். இதில் வலி இருந்தாலும், இல்லையென்றாலும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக கருத்தில் கொண்டு முறையான சிகிச்சை பெற வேண்டும்.
  • பெண்களுக்கு சில நேரங்களில் புண்கள் எதுவும் இல்லாமல் கூட மார்பக காம்புகளில் நீர்க்கசிவு ஏற்படும். சில நேரங்களில் ரத்த கசிவு கூட ஏற்படக்கூடும்.
  • மார்பகங்களில் வீக்கம் ஏற்படுதல், மார்பகத்தில் வலி, மார்பக பகுதிகளில் நெறிகட்டுதல்,மார்பக காம்புகள் உள்ளடங்கிய தோற்றம் போன்றவை ஏற்படக்கூடும்.

மேலும் படிங்க: வைட்டமின் பி12 பாதிப்பின் அறிகுறிகள் இது தான்! 

மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. முன்னதாக உங்களது மார்பக புற்றுநோய்  பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை  வீட்டிலே நீங்கள் சுய பரிசோதனை செய்து அறிந்துக் கொள்ள வேண்டும். தினமும் மார்பகங்களில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா? என்பதை சோதிக்க வேண்டும். வலது கைகளை இடது மார்பகத்திலும், இடது கைகளை வலது மார்பகத்தில் வைத்து அழுத்த வேண்டும். இதில் ஏதேனும் வலி இருக்கிறதா? என பரிசோதித்துக் கொள்ளுங்கள். பின்னர் நேராக நின்று உங்களது கைகளை பக்கவாட்டி வைத்து மார்பக பகுதிகளில் எதேனும் வீக்கம் உள்ளதா? என சோதிக்க வேண்டும்.

யாருக்கெல்லாம் அதிக பாதிப்பு ஏற்படும்?

  • பெண்கள் 30 வயதைக் கடந்துவிட்டாலே மார்பக புற்றுநோய் பாதிப்பை எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகளில் உள்ளது.
  • பெண்களுக்கு மரபணு ரீதியாகவும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். தாய் அல்லது சகோதரிகளுக்கு ஏதேனும் புற்றுநோய் ஏற்பட்டிருந்தால் நமக்கு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • வயதான காலத்தில் கர்ப்பம் தரித்தவர்கள் மற்றும் அதிக மன உளைச்சல் பாதிப்பில் உள்ளவர்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படக்கூடும்.
  • மாதவிடாய் நின்ற பின்னதாக உடல் எடை அதிகரித்தவர்கள் முதல் மிக இளம் வயதில் பூப்படைந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.

types of breast cancer

  • சரியான அளவில் உள்ளாடைகள் ( ப்ரா) போன்றவற்றைப் போடவில்லை என்றாலும் பெண்களுக்கு மார்பகத்தில் பாதிப்பு ஏற்படும். மார்பகத்தை அழுத்தும் அளவிற்கு இறுக்கமாகவும், அசௌரியமாக இருக்கும் ப்ராக்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் முறையாக கொடுக்காத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். உங்களால் எவ்வளவு காலம் முடிகிறதோ? அதுவரை தாய்ப்பால் கொடுத்து விடுங்கள்.

மேலும் படிங்க: வாழ்நாள் முழுவதும் நலமுடன் வாழ வேண்டுமா? உங்களுக்கான சிறந்த தேர்வு இது தான்!

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]