இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களும் PCOS பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதனால் மாதவிடாய் சுழற்சியுடன், கருவுறுதலும் பாதிக்கப்படுகிறது. இதற்கு மோசமான உணவுமுறை, வாழ்க்கை முறை, மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம். பல பெண்களுக்கும் நீர்க்கட்டியின் அறிகுறிகள் மற்றும் அதன் சிகிச்சை குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாதமையால் இவை வாழ்நாள் முழுவதும் தொடரும் நிலை ஏற்படுகிறது. பெண்களின் உடலில் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் சமநிலையின்மையால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகத் தொடங்குகின்றன. இதன் காரணமாக PCOS பிரச்சனையும் தொடங்குகிறது.
PCOS பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்களை உணவியல் நிபுணரான ராதிகா கோயல் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது பற்றிய தகவல்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் விரைவில் கர்ப்பம் தரிக்க உதவும் எளிய யோகாசனங்கள்
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்(PCOS) என்பதன் பொருள் பெண்களின் கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகளை குறிக்கிறது. இருப்பினும் PCOS அறிகுறிகளைக் கொண்ட அனைத்து பெண்களுக்கும் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதில்லை. நீர்க்கட்டிகள் இல்லாமலும் PCOS அறிகுறிகளை உணரலாம்.
PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் எனும் ஆண் ஹார்மோனின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இக்காரணத்தினால் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவான தசை வளர்ச்சி இருக்கும். மறுபுறம் நோயின் தாக்கம் இல்லாத பெண்களுக்கு தசை வளர்ச்சி இவர்களை விட குறைவாகவே இருக்கும்.
PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாமல் இருக்கலாம், இருப்பினும் வயது கூடும் பொழுது இது மாறிவிடும். குறிப்பிட்ட வயதிற்கு பிறகு PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சீரான மாதவிடாய் சுழற்சி இருக்கும்.
PCOS பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தூக்கம் தொடர்பான பல பிரச்சனைகள் நேரலாம். சரியான தூக்கம் வராமலோ அல்லது இடையிடையே விழிப்பது போன்ற பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடலாம். இது போன்ற அறிகுறிகள் பொதுவானவை, இருப்பினும் PCOS பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்களுக்கு தூக்கம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு முதல் பார்வையை மேம்படுத்துவது வரை முலாம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]