
எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இதை தவிர மற்ற உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் பெரும்பாலும் 30 வயதில் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதை ஹைபர்கால்சீமியா என்று கூறப்படுகிறது. பல சமயங்களில் அதன் அறிகுறிகளுக்கு தொன்றப்படும் ஆனால் இதை பெண்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. கால்சியம் குறைபாட்டினால் என்னென்ன அறிகுறிகள் தென்படலாம் என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க: இதய நோய் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை பல ஆரோக்கிய பலன்களை தரும் பூண்டு தோல்

கால்சியம் எலும்புகளை வலுப்படுத்துவதற்கு மட்டுமல்ல தசைகள் செயல்பாட்டிற்கும் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் அடிக்கடி தசைப்பிடிப்பு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக கால்களில் அடிக்கடி பிடிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சில நாட்களில் உங்களுக்கும் இது போன்ற உணர்வு இருந்தால் நீங்கள் கால்சியம் அளவை சரிபார்க்க வேண்டும்.
உடலில் குறைந்த கால்சியம் அளவு தொடர்பான மற்றொரு அறிகுறி குறிப்பாக கைகள், கால்கள் அல்லது முகத்தில் கூச்ச உணர்வு ஏற்படும் இல்லையெனில் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் இருக்கும். இதற்கு காரணம் நரம்புகளின் செயல்பாட்டிற்கு கால்சியம் அவசியம்.

கால்சியம் குறைபாடு நகங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எளிதில் உடையக்கூடிய அளவிற்குப் பலவீனமாக இருக்கும் அல்லது பாதியாக உடைந்த நகங்களை திடீரென்று பார்க்கலாம். இதற்கு உங்கள் கால்சியம் அளவு குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம்.
உடலில் குறைந்த கால்சியம் அளவு பலவீனத்தை கொடுக்கும். நீங்கள் குறைவாக வேலை செய்வீர்கள், போதுமான ஓய்வு எடுத்துக் கொண்டாலும் பலவீனமாக உணர்வீர்கள் அதற்கு குறைந்த கால்சியம் அளவு காரணமாக இருக்கும்.
மேலும் படிக்க: ஆரஞ்சு பழத்தை விட வைட்டமின் சி அதிம் நிறைந்த பழங்கள், காய்கறிகள் பற்றி தெரியுமா?
கால்சியம் பற்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. எனவே அதன் குறைபாடு பற்களின் பலவீனம் அல்லது உடையக்கூடிய தன்மையை அதிகரிக்கிறது. பல சந்தர்ப்பங்களில் குழிவு அபாயமும் அதிகரிக்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]