Saffron Tea Benefits : மூட்டுகளை வலுவாக்க, உடல் எடையைக் குறைக்க குங்குமப்பூ டீ குடியுங்கள்!

எந்த நோயும் அண்டாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டுமா? நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த குங்குமப்பூ டீயை நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்…

saffron water benefit for women

குங்குமப்பூவை கொண்டு செய்யப்படும் இந்த ஸ்பெஷல் டீயை நீங்கள் எப்போதாவது முயற்சித்திருக்கிறீர்களா? இல்லையெனில், முயற்சி செய்து உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படும் அற்புத மாற்றங்களை காண தயாராகுங்கள். குங்குமப்பூவை பால், கீர் அல்லது இனிப்புகளுடன் சேர்த்து சுவைத்து இருப்பீர்கள், ஆனால் குங்குமப்பூவை கொண்டு டீயும் செய்யலாம். குங்குமப்பூ டீயை குடித்து வர பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

குங்குமப்பூ விலை உயர்ந்தது என்றாலும் இதில் சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, வைட்டமின் C போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன. குங்குமப்பூ டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை ஊட்டச்சத்து நிபுணரான லவ்னீத் பத்ரா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

இதில் உடலுக்கு அத்தியாவசியமான பல வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நச்சுக்களிடமிருந்து உடலை பாதுகாக்கின்றன. குங்குமப்பூ டீ குடிப்பதால் உடல் எடை குறைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். தங்க நிறத்தில் இருக்கும் இந்த அற்புத பானமானது பருவகால நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும், குங்குமப்பூவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் C அழகை மேம்படுத்துகின்றன.

saffron tea

புற்றுநோய் மற்றும் இதய நோய்களை தடுக்கலாம்

இந்த கலவையில் புற்றுநோயை உண்டாக்கும் கெட்ட செல்களை அழிக்கக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, ஆனால் அது நல்ல செல்களை பாதிக்காது. குங்குமப்பூ டீ குடிப்பது நம் இதயத்திற்கும் நல்லது, இதில் உள்ள பண்புகள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

குங்குமப்பூ டீயில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துகின்றன. இதனுடன் கெட்ட கிருமிகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்க உதவும்.

குங்குமப்பூவில் நிறைந்துள்ள ரிபோஃப்ளேவின் என்ற சிறப்பு வைட்டமின் நம்மை ஆரோக்கியமாகவும், நோய்வாய்ப்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது. குங்குமப்பூ டீயின் மூலப்பொருளான சஃப்ரானால் என்ற சிறப்பு மூலப்பொருள் கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.

சுறுசுறுப்பான மூளைக்கு குங்குமப்பூ டீ

saffron water for health

குங்குமப்பூ டீ யில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மூளையின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. குங்குமப்பூவில் உள்ள குரோசின் மற்றும் குரோசெட்டின் கற்பித்தல் திறனை மேம்படுத்துகின்றன. குங்குமப்பூ டீயை தினமும் குடித்து வர உங்களுடைய நினைவாற்றல் சிறப்பாக இருக்கும்.

உடல் எடையை குறைக்க உதவும்

உங்களை ஸ்லிம் ஆக வைத்துக்கொள்ள குங்குமப்பூ டீ குடிக்கலாம். இது சருமத்திற்கும் நல்லது. குங்குமப்பூ டீயில் உள்ள குணங்கள் கருந்திட்டுகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி தெளிவான சரும அழகை பெற உதவுகின்றன. இதை சரியான அளவுகளில் எடுத்துக் கொண்டால் சருமத்தில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். குங்குமப்பூ டீ இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

மூட்டு வலிக்கு நல்லது

இன்றைய வாழ்க்கை சூழலில் மோசமான வாழ்க்கை முறையால் பலரும் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். குங்குமப்பூ டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன.

குங்குமப்பூ டீ செய்முறை

  • இந்த டீ செய்வதற்கு முதலில் தண்ணீரை சூடாக்கவும்.
  • இதனுடன் 3-4 குங்குமப்பூ இதழ்களை சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
  • இதை வடிகட்டிய பின் எடுத்துக் கொள்ளலாம்.

குங்குமப்பூ டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இருப்பினும் உங்களுடைய உணவு முறையில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்க ஈஸியான வழி, இளநீர் குடியுங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP