நாம் அனைவரும் பேரிக்காயை சுவையை அனுபவித்திருக்கிறோம் . பருவமழைக் காலத்தில் அதிகளவில் கிடைக்கும் பழமாக பேரிக்காய் இருந்து வருகிறது. அதன் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை பலருக்கு பிடிக்கும். பொதுவாக மக்கள் பச்சை அல்லது மஞ்சள் நிற பேரிக்காய் சாப்பிடுவார்கள், ஆனால் சிவப்பு நிற பேரிக்காய்களும் உள்ளது. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தருகின்றது. இன்று இந்த கட்டுரையில் சிவப்பு பேரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க: பெண்களை அசெளகரியமாக உணரச்செய்யும் பிறப்புறுப்பு நாற்றத்திற்கான காரணங்கள்
சிவப்பு பேரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
- சிவப்பு பேரிக்காய் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. அவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன, நல்ல கொழுப்புகளை உருவாக்க உதவுகிறது.
- சிவப்பு பேரிக்காய் சாப்பிடுவது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- சிவப்பு பேரிக்காய் சாப்பிடுவது சருமத்திற்கும் நன்மை பயக்கும். வைட்டமின் ஏ,பி மற்றும் சி நிறைந்துள்ளது. சரும செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது மற்றும் வயதான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க: திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் மணப்பெண்கள் ஒளிரும் சருமத்தை பெற டிடாக்ஸ் பானங்கள்
- சிவப்பு பேரீச்சம்பழத்தில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளதால் அவற்றின் நார்ச்சத்து எடையைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அடிக்கடி பசி எடுப்பதில்லை, குறைவாக சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும்.
- சிவப்பு பேரிக்காய் தொண்டை வலி பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடுவது நல்லது. அதன் சாறு தொண்டை பிரச்சனகளை சரிசெய்ய உதவுகிறது.
- நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த பெரிதும் உதவுகிறது. இது நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை உடலுக்கு வழங்குகிறது. இதில் வைட்டமின் கே உள்ளதால் எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றது. இதில் பொட்டாசியம் இருப்பதால் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
- சிவப்பு பேரிக்காய் நீரிழிவு நோயைக் குறைக்க உதவி செய்கிறது. இதில் குறைந்த கிளைசெமிக் கொண்ட பழமாக இருப்பதால் உணவு நீரிழிவு நோயாளிகள் சாப்பிட சிறந்தாது.
- சிவப்பு பேரிக்காயில் ஃபோலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் உட்கொள்வது சிறந்தது. மேலும் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவில் பேரிக்காய் சேர்த்துக்கொள்வது நல்லது.
- சிவப்பு பேரிக்காய் நீர் சத்து நிறைந்த பழமாகும். கோடைக்காலத்தில் இந்த ஜூஸை குடித்துவந்தால் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் நிரப்ப செய்கிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.