டிடாக்ஸ் பானங்கள் ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரம் மற்றும் அன்றாட வழக்கத்தில் சேர்க்கும் சிறந்த பானமாக இருந்து வருகிறது. குறிப்பாக மணப்பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை டிடாக்ஸ் பானம் தருகிறது. அவை குடலில் நச்சுக்களை நீக்கி இயற்கையான சரும சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. மணப்பெண்களுக்கு குர்கானின் சான்றளிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணர் தன்யா மெஹ்ராவிடம் பேசினோம், அவர் உணவில் சேர்க்கக்கூடிய சில ஆரோக்கியமான டிடாக்ஸ் பான ரெசிபிகளைப் பரிந்துரைத்தார்.
மேலும் படிக்க: கழுத்தில் இருக்கும் கருமையை நீக்கி சங்கு போன்ற கழுத்துக்கு வீட்டு வைத்தியம்
நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி எலுமிச்சையில் வைட்டமின் சி, பாலிபினால்கள் மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளதால் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவி செய்கிறது. இஞ்சி மண்ணுக்கு அடியில் எடுக்கப்படும் ஒரு வேர்த்தண்டுக்கிழங்கு ஆகும். இது பல ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இந்த எலுமிச்சை மற்றும் இஞ்சி டிடாக்ஸ் பானம் உடலை ஹைட்ரேட் செய்து சுத்தப்படுத்த ஒரு புத்துணர்ச்சியூட்டும் வழியாகும். எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவுகிறது. இஞ்சி செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. அதே நேரத்தில் வெள்ளரி நீரேற்றம் மற்றும் குளிர்ச்சியான விளைவை வழங்குகிறது. புதினா இலைகள் புத்துணர்ச்சியை சேர்க்கின்றன மற்றும் அவற்றின் செரிமான நன்மைகளுக்காக அறியப்படுகின்றன. கடல் உப்பு எலக்ட்ரோலைட்களை சமப்படுத்த உதவுகிறது. நீங்கள் நீரேற்றமாகவும், ஆற்றலுடனும் இருப்பதை உறுதிசெய்கிறது.
உங்கள் உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய மற்றொரு பயனுள்ள பானம் ஜீரா நீர். நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி சீரக விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் செரிமானம், எடை இழப்பு, நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் அதை எவ்வாறு தயார் செய்யலாம் என்பது இங்கே:
தேங்காய் நீர் ஒரு சிறந்த எடை இழப்பு பானமாகும். மேலும் எலுமிச்சையுடன் சேர்ந்து இது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை ஏற்படுத்த உதவுகிறது. தேங்காய் நீர் டிடாக்ஸ் பானத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க: முகத்தின் அழகை கெடுக்கும் நெற்றி கரும்புள்ளிகளை நீக்க வழிகள்
இயற்கையான பளபளப்பிற்கு இந்த டிடாக்ஸ் பானங்களை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]