கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உலகையே புரட்டி போட்ட விஷயங்களில் கொரோனாவும் ஒன்று. இதனால் ஏற்பட்ட கோடி கணக்கான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வரும் சமயத்தில் வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சமீப நாட்களாக கொரோனாவின் தீவிரம் குறைந்தாலும் புதிய மாறுபாடுகள் தொடர்ந்து வெளிவருகின்றன.
கொரோனாவின் புதிய மாறுப்பாடான BA.6 என்ற வைரஸ் இஸ்ரேல், டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வைரஸின் தாக்கம் குறித்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இளமையான முகம், பளபளப்பான கூந்தல் மற்றும் ஆரோக்கியமான உடலை பெற தட்டைப்பயறு போதும்!
ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் இந்த BA.6 வைரஸின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை வரும் வாரங்களில் தெரிந்து கொள்ளலாம். முந்தைய மாறுபாடுகளுடன் ஒப்பிடுகையில் புதிய வகை கொரோனா கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
முந்தைய கொரோனா தாக்குதல்களை போலவே, காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைப்பு, தலைவலி, உடல் வலி, குமட்டல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை மக்கள் உணர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது வரை இந்தியாவில் எந்த கொரோனா வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டால் சரியான நேரத்தில் சிகிச்சையை பெற வேண்டும்.
BA.6 தற்காப்பு நடவடிக்கைகள்
தற்போது வரை BA.6 மாறுபாட்டில் பெரிய சிக்கல்கள் எதுவும் தென்படவில்லை. இருப்பினும் ஏதேனும் நோய் அல்லது உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். வரும்முன் காப்பதே சிறந்தது. அடுத்து வரப்போகும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் கொரோனா போன்ற தீவிரமான நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
தற்காப்பு நடவடிக்கைகள்
- அனைவரும் முகக் கவசம் அணிய முயற்சிசெய்யலாம். குறிப்பாக பொதுக் கூட்டங்களில் இதை கடைபிடிக்கலாம்
- பொது இடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
- கைகளை முறையாக கழுவ வேண்டும்.
உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கொரோனாவிற்கான பரிசோதனையை செய்துகொள்ளலாம். அடுத்ததாக ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றத்தில் நமது எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்க கொரோனாவிற்கான பூஸ்டர் டோஸ்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: புரத சத்து குறைபாடு நீங்க, சைவ உணவுகளே போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation