Vegetarian Protein Sources : புரத சத்து குறைபாடு நீங்க, சைவ உணவுகளே போதும்!

உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான புரதத்தை சைவ உணவுகள் மூலமாகவும் பெற முடியும். புரதம் நிறைந்த சைவ உணவுகளை ஊட்டச்சத்து நிபுணரான கவிதா தேவ்கன் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்…

vegetaraian protein foods list

எதிர்ப்பு சக்தியை ஆதரிப்பது முதல் தசை வளர்ச்சி வரை, உடலின் பல முக்கிய செயல்பாடுகளில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் தினசரி புரத தேவையை பூர்த்தி செய்ய சரியான உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த தேவையை பூர்த்தி செய்ய பலரும் புரோட்டின் பவுடர் போன்ற செயற்கையான விஷயங்களை தேடி செல்கின்றனர். இதற்கு மாற்றாக ஆரோக்கியமான உணவுகள் மூலமாகவே புரதத்தை பெற முடியும்.

பெரும்பாலான அசைவ உணவுகளில் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சாதகமாக அமைகிறது. ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்களும் இனி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இன்றைய பதிவில் புரதம் நிறைந்த சைவ உணவுகள் குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான கவிதா தேவ்கன் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

புரத சத்து குறைபாடு

சைவம் அல்லது அசைவம், எந்த உணவு சாப்பிடுபவராக இருந்தாலும் சரி, அவர்களின் தினசரி புரத சத்து தேவையை உணவில் இருந்து பெற முடியாத நிலையில் உடலில் புரதச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. புரத சத்து குறைபாட்டை போக்க நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

புரதம் நிறைந்த சைவ உணவுகள்

புரதம் நிறைந்த சிறுதானியங்கள்

நிபுணரின் கருத்துப்படி கம்பு, ராகி, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் புரதச்சத்து நிறைந்துள்ளன. இவை உடலின் புரதத் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன. நாம் வழக்கமாக சாப்பிடும் உணவுகளுக்கு பதிலாக சிறுதானியங்களால் செய்யப்பட்ட தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிட முயற்சி செய்யலாம்.

புரதம் நிறைந்த பிஸ்தா பருப்புகள்

vegetaraian protein pista

பிஸ்தாவில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும்படி நிபுணர் பரிந்துரை செய்கிறார். உங்களுக்கு பசி எடுக்கும் பொழுது ஆரோக்கியமான இந்த பிஸ்தா பருப்புகளை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

புரதம் நிறைந்த காய்கறிகள்

சில காய்கறிகளில் அதிக அளவு புரதம் உள்ளது என்பது பலருக்கும் தெரிவதில்லை. உதாரணமாக பட்டாணி, காளான் போன்ற காய்கறிகளில் அதிக அளவு புரத சத்து உள்ளது. இந்த காய்கறிகளை உங்கள் தினசரி உணவில் ஒரு பகு,தியாக சேர்த்துக் கொள்ளலாம். இதை உணவுக்கு கூடுதல் சுவையை கொடுப்பதுடன் புரத உட்கொள்ளலின் அளவையும் அதிகரிக்கின்றன.

புரதம் நிறைந்த பால் சார்ந்த பொருட்கள்

சீஸ், பால், தயிர், பன்னீர் போன்ற பால் சார்ந்த பொருட்களில் புரத சத்து நிறைந்துள்ளன. இவற்றை உங்கள் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். புரதச்சத்து குறைபாடு நீங்க தினமும் ஒரு கிளாஸ் பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

vegetaraian protein milk

புரதம் நிறைந்த பருப்பு வகைகள்

பருப்பு புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, மசூர் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் அதிக அளவு புரத சத்து காணப்படுகின்றன. உங்கள் தினசரி புரத சத்து தேவையை பூர்த்தி செய்ய பருப்பு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால், உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: இரும்பு சத்து குறைபாடு பற்றிய கவலையை விடுங்க, காலையில் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP