herzindagi
thatta payaru benefits for health and skin

Thatta Payaru Benefits : இளமையான முகம், பளபளப்பான கூந்தல் மற்றும் ஆரோக்கியமான உடலை பெற தட்டைப்பயறு போதும்!

வேறெதுவும் தேவையில்லை, தட்டைப்பயறு குழம்பு மட்டும் இருந்தாலே போதும் ஒரு தட்டு சோறும் நிமிடத்தில் காலி ஆகுவிடும். சுவை நிறைந்த தட்டைப்பயறின் ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்…
Editorial
Updated:- 2023-08-18, 06:52 IST

தட்டைப்பயறு அல்லது காராமணியில் உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் A, B, C, ஃபோலிக் ஆசிட், இரும்பு சத்து, பொட்டாசியம் மெக்னீசியம் கால்சியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.

தட்டைப்பயறை உணவில் சேர்த்துக் வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இது குறித்த தகவல்களை  ஆயுர்வேத நிபுணரான ஸ்ரீவஸ்தவா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

 

இந்த பதிவும் உதவலாம்: இரும்பு சத்து குறைபாடு பற்றிய கவலையை விடுங்க, காலையில் இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!

 

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்

தட்டைப்பயறு குறைந்த அளவு கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். கொலஸ்ட்ராலின் அளவுகளை சீராக வைத்துக்கொள்ள தட்டைப்பயறை கடையல்,  கூட்டு அல்லது குழம்பு செய்து சாப்பிடலாம்.

புற்றுநோயை தடுக்கும் 

தட்டைப்பயறில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இதை உணவில் சேர்த்து வந்தால் தீங்கு விளைவிக்க கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து உடலை பாதுகாக்கலாம். இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் 

thatta payaru benefits for blood sugar

தட்டைப்பயறு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோய் அண்டாமல் இருக்கவும், இரத்த சர்க்கரையின் அளவுகளை சீராக வைத்துக் கொள்ளவும் தட்டைப்பயறை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் 

தட்டைப்பயறில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன. உடலில் கொழுப்பு சேரும் பொழுது உடல் எடை அதிகரிக்கின்றன, இந்நிலையில் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க நார்ச்சத்து நிறைந்த தட்டை பயிறை சாப்பிடலாம். இது இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க உதவும்.

வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கலாம்

தட்டைப்பயறில் உள்ள பண்புகள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை ஃப்ரீ ரேடிகல்களின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றன. தட்டைப்பயறை உணவில் சேர்த்து வர கருந்திட்டுகள், சுருக்கம் போன்ற வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கலாம். இது இறந்த சரும செல்களை நீக்கி சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

thatta payaru benefits for ageing

பளபளப்பான கூந்தலை பெறலாம் 

தட்டைப்பயறில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன. கூந்தலை பளபளப்பாக வைத்துக்கொள்ள தட்டைப்பயறை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதன்மூலம் முடி உதிர்வையும் கணிசமாக குறைக்க முடியும்.

உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால் மருத்துவரை கலந்து ஆலோசித்த பின் தட்டைப்பயறை எடுத்துக் கொள்ளவும்.

 

இந்த பதிவும் உதவலாம்: பல உடல் நல பிரச்சனைகளை விரட்ட, இந்த ஒரே ஒரு பயிற்சியை செய்தால் போதும்!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]