herzindagi
image

பேதி மாத்திரை போட பயமா? குடலை லீவு நாளில் சுத்தம் செய்ய இந்த ஜூஸ் குடிங்க- வயிறு சுத்தமா கிளீன் ஆகிரும்

ஒரு மாதம் முழுவதும் வரைமுறை இல்லாமல் அதிகமாக சாப்பிட்டு விட்டீர்களா?குடலை இயற்கையாக சுத்தம் செய்ய, உடலில் உள்ள ஒட்டு மொத்த அழுக்குகளை மலம் வழியாக வெளியேற்ற இந்த இயற்கையான இந்த ஜூஸை குடியுங்கள்.
Editorial
Updated:- 2025-01-09, 22:47 IST

தற்போதைய நவீன காலத்தில் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் 10 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை பல்வேறு வழிகளில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக உணவு பழக்க வழக்கங்களால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக உடல் பருமன், வளர்ச்சிதை மாற்ற பிரச்சனை, உள்ளிட்ட  பல்வேறு உடல்நல கோளாறுகள். இதற்கு முதல் காரணமே குடல் சுத்தமாக இல்லாதது தான். குடலையும், வயிற்றையும் நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். செரிமான பிரச்சனைகள் இல்லாமல்  சிறப்பாக நடந்தால் உடலில் வரும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரச்சனைகளை நம்மால் தடுக்க முடியும்.  நவீன காலத்தை ஜங்க் உணவு பழக்க வழக்கங்களால் குழந்தைகள் கூட செரிமான பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

மேலும் படிக்க:  ஒவ்வொரு நரம்பிலும் உள்ள அடைப்பு மற்றும் கெட்ட கொழுப்பை விரட்ட, இஞ்சியை இப்படி யூஸ் பண்ணுங்க

 

குடல் சுத்தம் முக்கியம்

 samayam-tamil-80027214

 

மாதத்தின் முதல் நாளிலிருந்து மாத கடைசி வரை ஒவ்வொரு நாளும் பல்வேறு உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். அதிலும் நவீன காலத்து ஜங்க் புட்கள், நூடுல்ஸ், சிக்கன் ரைஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் மற்றும் இறைச்சி வகைகளில் கோழி, ஆடு, மீன்கள் உள்ளிட்ட இறைச்சிகளையும் சாப்பிடுவோம். இந்த நிலையில் மாதத்திற்கு ஒருமுறையாவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஒட்டுமொத்த பங்களிப்பாக இருக்கும் குடலை சுத்தம் செய்வது அவசியமான ஒன்றாகும்.

 

ஏனென்றால், குடலில் பிரச்சனை இல்லாமல் செரிமானம் சிறப்பாக நடந்தாலே உடலில் பல்வேறு பிரச்சனைகள் தடுக்கப்படும். எனவே இந்த கட்டுரையில் மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த இயற்கையான வீட்டு வைத்திய ஜூஸை குடித்து உங்கள் குடலை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

ஒரே நாளில் குடலை இயற்கையாக சுத்தம் செய்ய?

 samayam-tamil-81424549

 

வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கிடைக்கிறது, மாதம் முழுவதும் மோசமாக சாப்பிட்டு வருகிறோம் என நினைக்கும் நபர்கள், வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும் குறிப்பாக குடலை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த இயற்கையான ஜூசை மாதத்திற்கு ஒருமுறை குடித்து உங்கள் குடலை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

 

பேதி மாத்திரை போட்டு குடலை சுத்தம் செய்ய பெரும்பாலான ஆண்கள், பெண்கள் சிறுவர்கள் முதல் பயப்படுவார்கள். ஏனென்றால் உடல் மிகவும் சோர்வடையும்.குடலே வெளியே வருவது போல் வலியை அனுபவிப்போம்.

குடலை சுத்தம் செய்யும் ஜூஸ்

 

drinking-amla-juice-for-skin-(1)-1730821980407-(2)-1736442075291

 

தேவையான பொருட்கள்:

 

  • 3 பெரிய நெல்லிக்காய்
  • 1 டீஸ்பூன் தேன்
  • ஒரு கைப்பிடி கருவேப்பிலை

 

செய்முறை:

 

  1. 3 பெரிய நெல்லிக்காயில் கொட்டையை எடுத்து சிறியதாக நறுக்கி மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும்.
  2. ஒரு ஸ்பூன் தேன், ஒரு கைப்பிடி கருவேப்பிலை, ஒரு மிதமான அளவு கிளாஸில் தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
  3. இதை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை வடிகட்டி, அந்த ஜூஸை அப்படியே குடிக்கவும்.
  4. ஒரு மணி நேரத்தில் உங்கள் குரல் சுத்தமாக தொடங்கிவிடும், தொடர்ந்து உங்களுக்கு மலம் வரத் தொடங்கும்.
  5. ஒன்றிலிருந்து 5 முறை மோஷன் வரும், வயிற்றில் குடலில் மற்றும் அதை சுற்றியுள்ள கெட்ட அழுக்குகள் முழுவதும் மலத்தின் வழியாக வெளியே சென்று விடும். ஐந்தாவது முறை மோஷன் சென்றவுடன் வயிறு,குடல் முழுவதும் சுத்தமாகிவிடும்.
  6. வயிறு சுத்தமாகிவிட்டது என்று நினைப்பவர்கள் ஒரு கிளாஸ் மோர் குடித்தால் போதும், அல்லது மிதமான அளவு தயிர்சாதம் சாப்பிட்டால் மோஷன் போவது நின்றுவிடும்.

இந்த பானத்தை தவிர்க்க வேண்டியவர்கள்

 

உடலில் குறைவான சக்கரை அளவு இருப்பவர்கள், ஹலோ சுகர் இருப்பவர்கள்,மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள், கிட்னியில் கல் இருக்கும் பிரச்சனை இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் குறித்த பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஜூஸை தவிர்த்து விடவும்.

 

மேலும் படிக்க: உடலில் உள்ள "கெட்ட கொலஸ்ட்ராலை" 30 நாட்களில் விரட்டும் 10 இயற்கை மூலிகைகள்

 

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த  சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

image source: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]