இளம்பெண்கள் வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணி நேரத்தில் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

இயற்கையின் வரப்பிரசாதம் பூண்டு, தவிர்க்க முடியாத எக்கச்சக்க நன்மைகளைக் கொண்ட பூண்டுகளை வறுத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் அதுவும் இளம் பெண்கள் வறுத்தப்பூண்டுகளை சாப்பிட்டால் 24 மணி நேரத்தில் உடலில் என்ன நடக்கும் அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
image

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போதைய நவீன காலத்து உணவு முறை பழக்கவழக்கத்திலும் கூட பூண்டுகள் சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளது என்றே நாம் சொல்லலாம். குறிப்பாக அசைவ உணவுகள் சமைப்பதில் பூண்டு மிகப்பெரிய பங்காற்றிய வருகிறது. அந்த அளவிற்கு அசைவ உணவுகளின் ருசியை அதிகரிப்பதில் பூண்டுகள் வல்லமை படைத்தவை. பூண்டுகளை வெளிநாட்டவர்கள் அசைவ உணவுகளில் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் முழுமையாக அப்படியே சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள்.

பூண்டு பச்சையாக, அல்லது வறுத்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகபட்ச உயர் இரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால், கொழுப்பு கழிவுகள் ஆகியவை முற்றிலுமாக அகற்றப்பட்டு இதய நோய்கள் வராமல் தடுக்கும். குறிப்பாக கொலஸ்ட்ரலால் ஏற்படும் மாரடைப்பு, தமனி தடிப்பு போன்றவற்றை எளிதாக கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது பூண்டு. பூண்டில் உள்ள சிறப்பு சத்துக்கள் ரத்த நாளங்களை தொய்வடையாமல் வைத்து எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கட்டுப்படுத்தப்படும்.

வறுத்த பூண்டை இளம்பெண்கள் சாப்பிட்டால் 24 மணி நேரத்தில் உடலில் என்ன நடக்கும்?

is-it-so-good-to-eat-roasted-garlic-main (1)

பூண்டுகளை நெய்யில் வறுத்த முறையில் உணவாக சாப்பிட்டால் நம் உடலில் 24 மணி நேரத்தில் ஏற்படும் அற்புதமான மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
  • 2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
  • 4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
  • 6-7 மணிநேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
  • 7-10 மணிநேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
  • 10-24 மணிநேரத்தில் முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
  • கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும். தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
  • வறுத்த பூண்டு தமனிகளை சுத்தமாக வைத்திருக்கும். அவை இரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. * உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் தங்கள் உணவில் வறுத்த பூண்டை மிதமான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வறுத்த பூண்டு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.

Untitled design - 2025-02-24T234524.974

  • வறுத்த பூண்டை தொடர்ந்து உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பவுண்டுகளில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி உள்ளன, இவை இரண்டும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. எனவே, வறுத்த பூண்டு வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
  • நீங்கள் சோர்வாக உணரும்போதும், உங்கள் ஆற்றல் அளவுகள் குறைவாக இருக்கும்போதும், வறுத்த பூண்டை சாப்பிடுவதன் மூலம் நல்ல மாற்றத்தைப் பெறலாம். வறுத்த பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
  • வறுத்த பூண்டை சாப்பிடுவதால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது. வறுத்த பூண்டு ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் விரும்பினால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 பல் பூண்டு எடுத்துக் கொள்ளலாம்.
  • இரத்த அழுத்தத்தை சீராக்கும். உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
  • எலும்புகளின் வலிமை அதிகரிக்கும். அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும். உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.

வறுத்த பூண்டு செய்வது எப்படி?

Garlic-benefits-121-2

நீங்கள் வறுத்த பூண்டு விரும்பினால், ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, பூண்டு பற்களை நன்றாக வதக்கவும். சூடாக்கிய பிறகு, 1-2 பூண்டு பற்களை நசுக்கி, 1 தேக்கரண்டி தேனுடன் கலக்கவும். காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன.

தூங்க செல்வதற்கு முன் வறுத்த பூண்டு

process-aws (34)

  • இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பூண்டு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
  • இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் வறுத்த பூண்டைச் சாப்பிடுவது அதிகரித்து வரும் கொழுப்பைக் குறைக்கிறது. இதன் பொருள் உடலில் உள்ள கொழுப்பு அளவு குறைகிறது. இது நம் இதயத்தை எப்போதும் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கிறது. மேலும், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் வறுத்த பூண்டை உட்கொள்வது உடலில் இருந்து நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவுகிறது.
  • பூண்டு உடல் கொழுப்பைக் குறைப்பதால், எடை குறைக்க விரும்புவோர் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் வறுத்த பூண்டைச் சாப்பிடுவது நல்லது. மேலும், வறுத்த பூண்டை தொடர்ந்து உட்கொள்வது உடலின் எலும்புகள் மற்றும் தசைகளின் வலிமையை அதிகரிக்கிறது.
  • உங்கள் உடல் மிகவும் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால், வறுத்த பூண்டை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், படுக்கை நேரத்தில் பூண்டை உட்கொள்வது சுவாசப் பிரச்சினைகளிலிருந்து விரைவாக மீள உதவும்.

மேலும் படிக்க:வெகு நாட்களாக குடலில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை ஒரே இரவில் வெளியேற்ற உதவும் ஆயுர்வேத பானங்கள்

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP