herzindagi
Weather and migraines

Monsoon Migraine: நம்மை ஒருவழியாக்கும் மழைக்கால ஒற்றை தலைவலியை போக்கும் வழிகள்

மழைக்காலத்தில் ஒற்றைத் தலைவலி வந்தால் அது அதிகமாக வலி தரும், ஆனால் அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன தெரியுமா?
Editorial
Updated:- 2024-08-12, 18:33 IST

மழைக்காலம் இயற்கை சுற்றிலமாக தரும் இனிமையான வண்ணம், எங்கு பார்த்தாலும் பசுமை, மழை சாரால் மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவற்றைக் கொண்டு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கோடை காலம் வந்தவுடன் மக்கள் பருவமழைக்காக காத்திருக்கிறார்கள், ஆனால் சிலருக்கு பருவமழை நல்ல சூழலை தராமல் அதற்கு பதிலாக ஒரு பிரச்சனையாக மாறும். பல வகையான நோய்களின் ஆபத்து இதில் அதிகரிக்கிறது. அதில் ஒன்று இந்த ஒற்றைத் தலைவலி பற்றி புகார், குறிப்பாக அதிகமான நபர்கள் இந்த பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மழைக்காலத்தில் ஒற்றைத் தலைவலி ஏன் ஏற்படுகிறது என்பது இப்போது கேள்வி. இதைப் பற்றி தெரிந்து கொள்வோம் டாக்டர் கடம் நாக்பால், மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணர், சலுப்ரிடாஸ்.

மேலும் படிக்க: தாய் மற்றும் குழந்தைக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் சுகப்பிரசவம்

மழைக்காலத்தில் ஒற்றைத் தலைவலி வருவதற்கான காரணங்கள் 

migraine inside

பருவமழை ஈரப்பதத்தில் அதிகரிப்பு மற்றும் வளிமண்டல அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும், வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் இரத்த நாளங்களின் சுருக்கம் மற்றும் விரிவாக்கத்தை தூண்டப்படுவதால். இது ஒற்றைத் தலைவலியைத் தூண்டுகிறது. அதே நேரத்தில் பருவமழையில் ஒவ்வாமை ஏற்படலாம், இது உணர்திறன் உள்ளவர்களுக்கு ஒற்றைத் தலைவலி தாக்குதல்களை அதிகரிக்க செய்கிறது. அதிக ஈரப்பதம் உடலில் நீர் இழப்பை ஏற்படுத்த செய்யும், இந்த காரணத்தால் உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலை பாதிக்கப்படலாம், இதுவும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையை அதிகரிக்க செய்யும். பருவமழை காரணமாக மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் இது ஒற்றைத் தலைவலியையும் தூண்டுகிறது.

ஒற்றைத் தலைவலியிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் 

migraine new inside

  • ஒவ்வாமையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  • மழையில் நனைவதை தவிர்க்கவும்.
  • நீரேற்றமாக இருக்க குறைந்தாது எட்டு கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். 
  • உடற்பயிற்ச்சி செய்வதன் மூலம் உங்கள் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். 
  • ஒற்றை தலைவலி வருவதற்கு மன அழுத்தமும் ஒரு காரணம், அதனால் மனதை சமநிலையில் வைத்திருக்க தியானம் செய்யுங்கள்.
  • சரியான உணவை உண்ணுங்கள்.

மேலும் படிக்க: உடலுறவுக்குப் பிறகு ஏற்படும் சிறுநீர் தொற்றைச் சரிசெய்வதற்கான வழிகள்

  • ஒரு நாளைக்கு 8 மணி நேர தூக்கத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க  Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]