கோடைக்காலம் வந்தாலே அனல் காற்றும், சுட்டெரிக்கும் வெயிலும் உடன் சேர்ந்து விடும். எப்போதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி இறுதி வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இப்பொழுதே இப்படி என்றால், வரவிருக்கும் அக்னி நட்சத்திர வெயில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும் வெயிலால் உடல் நல பிரச்சனைகளும் ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், கோடைக்காலத்திற்கு ஏற்ற பானங்களை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோ அதன் லிஸ்ட் இங்கே.
![summer drink]()
மேலும் படிக்க : ஆப்பிள் சிடர் வினிகரில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
கோடைக்காலத்திற்கு ஏற்ற பானங்கள்:
- எலுமிச்சைபானம்: வெயிலின் காரணமாக ஏற்படும் தலைச்சுற்றல் பிரச்சனையைத் தீர்க்க எலுமிச்சையில் உப்பு கலந்து சாப்பிடும் போது உடலுக்கு ஆற்றலை வழங்கும். இதோடு மட்டுமின்றி எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு உதவுகிறது. எலுமிச்சை பானத்துடன் புதினா மற்றும் இஞ்சி போன்றவற்றை சேர்க்கும் போது கோடையில் உடல் குளிர்ச்சியாகவும் நீரேற்றத்துடனும் இருக்கும்.
- கரும்புசாறு: கோடை வந்தாலே கரும்பு சாறு கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆம் வெயிலுக்கு இதமாக இருக்கும் பானங்களில் ஒன்று தான் கரும்பு சாறு. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியத்துடன் வைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இதோடு உடலுக்கு தேவையான நீர்ச்ச்சத்துக்களையும் வழங்குகிறது.
- பப்பாளி ஜூஸ்: கோடை வெப்பத்தை வெல்வதற்கு அருமையான பானங்களில் ஒன்று தான் பப்பாளி. இதில் உள்ள அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் பப்பேன் உற்பத்தி செய்யும் என்சைம்காளல் உடலுக்கு ஆற்றலைத் தரும். அதே சமயம் வெயிலுக்கு இதமாகவும் அமையும்.
- பருவகாலபழச்சாறுகள்: பொதுவாக சீசன்களில் விளையக்கூடிய பழங்களில் சாப்பிடுவது உடலுக்க ஆரோக்கியம் அளிக்கும் என்பதால் கோடைக்காலத்தில் அதிகமாக விளையக்கூடிய பழங்களைப் பயன்படுத்தி ஜூஸ்களை நீங்கள் செய்யலாம். குறிப்பாக தர்பூசணி, மாதுளை, ஆரஞ்சு போன்ற பழங்களை அதிகமாக உட்கொள்வது உடலுக்கு ஆற்றலை அளிக்கும். அதே சமயம் நீர்ச்சத்துக்களும் அதிகளவில் இருப்பதால் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு உடல் சூட்டையும் தணிக்கும்.
மேலும் படிக்க : இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த நட்ஸ் சாப்பிட்டால் போதும்!
- துளசிபானம்: கோடை வெயிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும் மற்றொரு பானங்களில் ஒன்று துளசி. குளிர்காலத்தில் மட்டுமல்ல, கோடைக்காலத்திலும் வெயிலின் தாக்கத்தால் சளி பிரச்சனைகள் அதிகளவில் ஏற்படும். இதிலிருந்து உங்களைப் பாதுகாக்க இந்த துளசி பானத்தைத் தினமும் பருகலாம். உடல் சூட்டைத் தணிக்கவும் உதவியாக உள்ளது.
Image source- Google