BTS குழுவின் வருகைக்கு பிறகு உலகத்தில் பெரும்பாலான இளைஞர்களின் கவனம் கொரியாவின் பக்கம் திரும்பி இருக்கிறது. கொரியன்களின் கலாச்சாரம், பழக்கவழக்கம் அவர்களது இளமையான தோற்றத்திற்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் ரகசியமாகும். கொரியன்களை போல நாமும் இளமையாக சுறுசுறுப்பாக மாறி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவும் முக்கியமான கொரிய பழக்கவழக்கங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான உணவு
கொரியன்கள் வழக்கமாக சாப்பிடும் உணவுகளான கிம்ச்சி, கடற்பாசி மற்றும் கிரீன் டீ போன்றவற்றில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது நமது சருமத்தை இளமையாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது. புரோபயாட்டிக் உணவான கிம்ச்சி உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சன்ஸ்கிரீன் பயன்பாடு
சூரியனின் புற ஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை கொரியன்கள் நன்கு அறிந்தவர்கள். இதனால் தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துகின்றனர். கொரியாவின் வெப்பநிலை நாடுகளைவிட வித்தியாசம் கொண்டது. குளுமையான சூழலே நீடிக்கும். தோல் வறட்சி, முன்கூட்டியே வயதாவை தடுக்க மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுகிறது.
வழக்கமான உடற்பயிற்சி
உற்சாகமாகவும் இளமையாகவும் இருக்க கொரியன்கள் தினமும் உடற்பயிற்சி செய்கின்றனர். கொரியாவில் டேக்வாண்டோ மிகவும் பிரபலம். பெரும்பாலான மக்கள் சிறுவயதிலேயே டேக்வாண்டோ கற்றுக் கொள்கின்றனர். கே - பாப் நடன பயிற்சியும் அவர்களின் ஃபிட்னஸ் ரகசியமாக விளங்குகிறது.
இரட்டை குளியல்
கொரியன் தினமும் இரண்டு முறை குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் இரண்டு விதமான க்ளென்சரை பயன்படுத்துகின்றனர். எண்ணெய் சார்ந்த க்ளென்சர் சருமத்தில் உள்ள அசுத்தங்களை நீக்குகிறது. நீர் சார்ந்த க்ளென்சர் கதிரியக்க தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சமருத்தில் இறந்த செல்களை நீக்க இயற்கையான வழிகளை பின்பற்றுகின்றனர். ஸ்க்ரப்பர்களை பயன்படுத்துவதில்லை. இதனால் அவர்களது சருமம் பிரகாசமாக தோன்றுகிறது.
உணவில் கவனம்
கொரியன் உணவுபழக்கத்தில் அதிக அக்கறை கொண்டவர்கள். சமைக்கும் உணவில் ஆரோக்கியத்திற்கே முக்கியத்துவம் தருகின்றனர். ருசியை விட பசியில் கவனம் செலுத்தி அதிகப்படியான உணவு உட்கொள்ளலை தவிர்க்கின்றனர். பெரும்பாலான கொரியன்கள் ஆரோக்கியமான உடல் எடையிலேயே காணப்படுவதற்கு அவர்களது உணவுமுறை முக்கியமான காரணம். இது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது
நீரேற்றம்
இளமை சருமத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். கொரியன்கள் தங்களை நீரேற்றமாக வைத்திருக்க பார்லி டீ மற்றும் கிரீன் டீ போன்ற நீரேற்ற பானங்களை குடிக்கின்றனர்.
போதுமான தூக்கம்
கொரியர்களின் அழகு மற்றும் ஆரோக்கிய வழக்கத்தின் இன்றியமையாத அங்கமாக தூக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தூங்குவதற்கு ஒரு வழக்கமான அட்டவணையை கடைபிடிக்கின்றனர். அதிக நேரம் உழைக்கும் போது அதற்கு ஏற்ப உடல் ஓய்வு எடுப்பதை உறுதி செய்கின்றனர். மேலும் அவர்களது படுக்கை அறையை அமைதியான சூழல் கொண்டது. இதனால் சிறந்த தூக்கத்தை பெறுகின்றனர்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation