நீங்கள் அடிக்கடி நோய்வாய் படுகிறீர்களா? உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல்ரீதியாக பல நோய்களை எதிர் கொள்கிறீர்களா? அப்படி என்றால் இனி உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகளை கண்டுபிடித்து சாப்பிட வேண்டியது தான் உங்கள் கடமை. தினம் தினம் இவற்றை உட்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சில மசாலாக்கள் மற்றும் மூலிகை தாவரங்கள் பற்றி இங்கு காண்போம்.
இதுவும் உதவலாம்:செம்பருத்தி பூக்களின் பயன்கள்
இஞ்சி
பல நூற்றாண்டுகளாக இஞ்சி தான் பண்டைய கால மருந்தாக இருந்து வருகிறது. இஞ்சியில் உள்ள சிறப்பான குணங்கள் நம் உடலில் ஏற்படும் பிரச்சினைகளான குமட்டல், சளி மற்றும் ஆர்த்தரிட்டிஸ் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும். இஞ்சியை எல்லா வகையான உணவுகளிலும் பயன்படுத்த ஏற்றது. இஞ்சி டீ குடிக்க சுவையாகவும், மனமாகவும் இருக்கும். வயிறு அஜீரணம், கீமோதெரபி மற்றும் காலை சோர்வு போன்ற ஏதாவது ஒரு பிரச்சினை காரணமாக குமட்டல் சில சமயங்களில் ஏற்படும். இந்த குமட்டலை சரி செய்ய இஞ்சி டீ குடிக்கலாம். இஞ்சியில் ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் ஆன்டி இன்பிளமேட்டரி தன்மைகள் கொண்டது என்று ஆய்வுகள் கண்டறிந்து உள்ளன. உடல்நலம் பாதிக்கப்பட்டால் அதற்கு காரணமான பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது இஞ்சி.
சீமை சாமந்தி
மனநிம்மதியை தரும் தாவரங்களில் இதுவும் ஒன்று. ஆய்வுகளின் அடிப்படையில் இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சாமந்தியில் ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி ஆக்சிடேடிவ் தன்மை கொண்ட பயோஆக்டிவ் கலவைகள் உள்ளன. சாமந்தியில் இத்தகைய நன்மைகள் உள்ளதால் ஒரு நாளைக்கு ஒரு வேளை இந்த தேநீரை நாம் பருக வேண்டும். சாமந்தி பூக்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன் கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, மனநிம்மதியும் கிடைக்கும். இதை குடிப்பதற்கு முன்பு ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்
இலவங்கப்பட்டை
குளிர் காலத்திற்கு ஏற்ற மனமான, சூடான மற்றும் காட்டமான பொருள் தான் இலவங்கப்பட்டை. இந்தியர்களாகிய நமக்கு இலவங்கப்பட்டை அதிகப்படியான சமையல் உணவுகளில் பயன்படுவதாக இருக்கிறது. இந்த மசாலாவை சேர்க்க நாம் குடிக்கும் காபியின் சுவை கூடும் அல்லது நாம் உண்ணும் உணவில் இதை ஒரு துண்டு சேர்த்தால் உணவின் ருசியும், மனமும் அபாரமாக மாறி விடும். இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது.
பூண்டு
பூண்டு நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆற்றல் அடைய வைக்க போராடும். நம் உடலில் உருவாகும் தொற்றுக்களை எதிர்த்து போராட்டம் நடத்த மற்றும் வைரஸ், பாக்டீரியா கிருமிகளை அழிக்க சில செல்கள் உடலுக்கு தேவைப்படுகிறது. அந்த செல்களை பூண்டு மட்டுமே உற்பத்தி செய்கிறது.
எலுமிச்சை
சிட்ரஸ் பழங்களில் சிறந்தது எலுமிச்சை. இது உணவில் சுவை மற்றும் மனத்தை கூட்டுகிறது. இது ஆன்டி ஃபங்கல், ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி வைரல் தன்மையை கொண்டது. இதில் வைட்டமின் C சத்து மற்றும் பாலிஃபீனால் சத்து உள்ளது. நல்ல தெளிவான சருமத்திற்கு வைட்டமின் C சத்து தேவைபடுகிறது. மேலும் சளி பிரச்சனை இருப்பவர்களுக்கு இது நல்ல நிவாரணம் தருகிறது. சளி பிரச்சனையை விரைவாக குறைக்கிறது.
இதுவும் உதவலாம்:கொலஸ்ட்ராலை குறைக்கும் சட்னி ரெசிபி
தேன்
தேன் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது மற்றும் சில வகையான புற்று நோய்களை அழிக்கிறது. டீ மற்றும் சில இனிப்பு பண்டங்களில் ஜீனிக்கு பதிலாக தேன் சேர்த்து செய்ய, சுவை கூடும்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation