
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல் படி, நாளுக்கு நாள் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதிகமாக பரவி வரும் இந்த புதிய வகை கொரோனா தாக்குதலிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
புதிய வகை கொரோனாவால் அதிகமாகும் வழக்குகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டாலும் அதை ஒரு சிலர் இன்னும் கடைப்பிடிப்பதில்லை. கொரோனா பரவலை மேலும் தடுக்க புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இரத்தம் உறையாமை நோய் ஏன் ஏற்படுகிறது? இதன் அறிகுறிகள் என்ன?

XBB.1.16 மாறுபாட்டின் முக்கிய அறிகுறிகளில் காய்ச்சலும் ஒன்று. லேசான காய்ச்சலில் தொடங்கி, 1-2 நாட்கள் வரை நீடிக்கலாம். கடுமையான காய்ச்சலுடன் தொண்டை வலி, உடம்பு வலி, தலைவலி மற்றும் வயிற்று அசௌகரியங்களும் இந்த புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் ஆகும். இதன் அறிகுறிகள் மிகவும் பொதுவானவை என்பதால் நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதை உணராமலும் போக வாய்ப்பு உள்ளது.
XBB.1.16 மாறுபாட்டில் பெரிய சிக்கல்கள் எதுவும் தென்படவில்லை. இருப்பினும் ஏதேனும் நோய் அல்லது உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இந்த புதிய வகை மாறுபாடு மற்ற வகைகளை போல ஆபத்தானது அல்ல. இருப்பினும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் உங்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கல் தீர சோம்பை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]