Hygiene Tips for Women in Tamil : பெண்கள் பொது கழிப்பிடத்தை பயன்படுத்துவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்

அவசர தேவைக்கு பொது கழிப்பிடத்தை பயன்படுத்துவதற்கு முன்பு பெண்கள் கவனிக்க வேண்டிய சுகாதார விஷயங்கள் குறித்து இதில் விரிவாக பார்ப்போம். 

women toilet tips

இந்தியாவில் இருக்கும் பல பொது கழிப்பிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பயன்படுத்தும் போது தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. குறிப்பாக வெளியூர், வெளியிடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பெண்கள் வேற வழியின்றி பொது கழிப்பிடங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவசர தேவைக்காக சுத்தம் இல்லாத கழிப்பிடங்களை பெண்கள் பயன்படுத்தும் போது சில நேரத்தில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

பொதுவான இடங்களை தொடுவதை தவிர்க்கவும்

பொது கழிப்பிடங்களை பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டிய முதல் விஷயம், பொதுவான இடங்களை தொடக்கூடாது. சுகாதாரமற்ற கழிப்பறைகளில் ஆபத்தான பாக்டீரியாக்கள் காணப்படும். அவை சுவர்கள், கதவுகள் ஆகியவற்றில் பரவி இருக்கலாம். அது போன்ற இடங்களை கைகளால் தொடுவதை தவிர்க்கவும். ஒருவேளை தொட்டுவிட்டால் சானிடைசரை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய மறவாதீர்கள்.

மாஸ்க் பயன்படுத்தவும்

கோவிட் தொற்றுக்கு பின்பு மாஸ்க் மிக மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. பொது கழிப்பறைக்கும் இது அவசியம். கழிப்பிடத்தை பயன்படுத்திய பின்பு ஃப்ளஷ் செய்கிறோம். அப்போது பறக்கும் பாக்டீரியாக்களை சுவாசிக்கிறோம். அதை தவிர்க்க பொது கழிப்பிடத்தில் மாஸ்க்கை பயன்படுத்தவும். டிஸ்போசபிள் மாஸ்க் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

public toilet women

அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம்

பொது கழிப்பிடத்தை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வீட்டு நினைப்பில் அதிக நேரம் அமர கூடாது. முடிந்த வரை சீக்கிரம் வெளியே வருவது நல்லது.

சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவவும்

பெரும்பாலும் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு தண்ணீரில் மட்டுமே கைகளைக் கழுவுகிறோம், பொதுக் கழிவறைகளை பயன்படுத்திய பிறகு சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். சானிடைசர் மூலம் உங்கள் வேலை முடிந்துவிட்டது என நினைக்காதீர்கள். சோப்பு மற்றும் தண்ணீர் இரண்டும் அவசியம் மற்றும் பாக்டீரியாவைக் கொல்ல விரல்களுக்கு இடையிலும் கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். நகங்களையும் சுத்தம் செய்யு வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP