herzindagi
ideas for weight management

Weight management:டயட்டில் இருக்கும் போது பசிக்கிறதா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் பசி உணர்வு நமக்கு ஏற்படாது.
Editorial
Updated:- 2023-12-16, 14:00 IST

உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைக்கு பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. டயட்டில் ஈடுபடுவது,ஜிம்மிற்குச் செல்வது என ஆரோக்கியமான முறையில் அதிகரித்த உடல் எடையை பலர் குறைப்பார்கள். இதன் பின்னர் ஆரோக்கியமாக மற்றும் கட்டுப்பாடோடு சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் நிச்சயம் பலரால் முடியாது. எப்போதும் பசியாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.

weight management

மேலும் படிக்க: புதிய தொற்று நோயாக உருவெடுக்கும் மன அழுத்தம்; தப்பிப்பது எப்படி?

காலை உணவை உட்கொள்ளுதல்:

காலை உணவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்று. எனவே நாள் முழுவதும் பசியின் உணர்வுகளை நிர்வகிக்க வேண்டும் என்றால், காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

புரதத்திற்கு முன்னுரிமை:

  • பசியின் உணர்வைக்கட்டுப்படுத்த உதவும் மற்றொரு காரணிகளில் ஒன்று புரதம். ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால், இறைச்சி, பீன்ஸ், பருப்பு வகைகள், கோழி, மீன் போன்ற உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவோடு சாப்பிடுவது நல்லது.
  • புரதசத்து நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடும் போது, பசியைத் தூண்டும் கிரெலின் அளவைக் கட்டுப்படுத்தி உங்களின் பசி உணர்வைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

நட்ஸ்களை உட்கொள்ளுதல்:

  •  நார்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி போன்ற அனைத்து வகையான நட்ஸ் வகைகளையும் நீங்கள் உட்கொள்ளலாம்.
  • இதுப்போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடும் போது பசியைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான எடையை நிர்வகிக்க  தவியாக இருக்கும். ஆனாலும் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு நாளைக்கு 68 கிராம் அளவிற்கு நட்ஸ்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

நல்ல தூக்கம்:

  • போதுமான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் நமது பசி உணர்வைத் தூண்டும் ஹார்மோன்களைத் தொந்தரவு செய்கிறது. இதனால் பசி உணர்வு அதிகரிக்கிறது. எனவே இரவில் குறைந்தது நீங்கள் 7 அல்லது 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.
  • இதோடு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிடுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மன அழுத்தத்தை நிர்வகித்தல்:

how to candle stress management

  • இன்றைக்கு மன அழுத்தம் என்பது பெரிய தொற்று நோயாக மக்களிடம் உருவெடுக்கிறது. மன அழுத்தத்தோடு இருக்கும் நபருக்கு, உடலின் கார்டிசோலின் உற்பத்தியை அதிகரித்து, நமக்கு பசி உணர்வைத் தூண்டுகிறது.
  • எனவே எவ்வித சூழலிலும் மன நிம்மதியுடன் இருப்பதற்குப் பழகிக்கொள்ளுங்கள். இதுவும் உங்களுக்கு ஆரோக்கியமான உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
  • மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது.

  மேலும் படிக்க: எடை இழப்பிற்கு உதவும்  அற்புதமான மசாலாப் பொருள்களின் லிஸ்ட்!

நீங்கள் டயட்டில் இருக்கும் போது உங்களுக்குப் பிடித்தமான உணவுகள் இருந்தால் சாப்பிடவும். ஆனால் எவ்வளவு? என்ன சாப்பிடுகிறோம்? என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]