Weight loss Spices: எடை இழப்பிற்கு உதவும் அற்புதமான மசாலாப் பொருள்களின் லிஸ்ட்!

இஞ்சி,இலவங்கப்பட்டை, மஞ்சள் என உடல் எடைக் குறைப்பிற்கும் உதவும் அற்புத மசாலாப் பொருள்கள் இது தான்!

weight loss spice items

இன்றைக்கு மாறிவரும் உணவு பழக்கவழக்களால் பலரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் எடை அதிகரிப்பு. குண்டாக தெரிவதால் பலரின் கேளிக்கைகளுக்குப் பயந்து அதிகரித்த எடையைக் குறைக்க ஜிம்மிற்கு செல்வது முதல் டயட்டில் இருப்பது போன்ற பல வழிமுறைகளையெல்லாம் கையாள்வார்கள். ஆனாலும் அனைத்து நேரங்களிலும் இது நிச்சயம் பலனளிக்காது.

உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றால், நீங்கள் ஆரோக்கியமான உணவுமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு எப்படி வீட்டு சமையல் அறையில் உள்ள மசாலாப் பொருள்கள் உடல் எடையைக்குறைப்பிற்கு உதவும் என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

weight loss spices list ()

எடைக்குறைப்பிற்கு உதவும் மசாலாக்கள்:

இலவங்கப்பட்டை:

  • அனைவரின் வீட்டு சமையல் அறையில் இருக்கும் பொருள் தான் இலவங்கப்பட்டை. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடல் எடையைக்குறைக்க உதவுகிறது.நீங்கள் இலவங்கப்பட்டை தூள் அல்லது பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கும் போது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியின்மையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • இலவங்கப்பட்டை பயன்பாடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது.

மஞ்சள்:

  • எடை இழப்பு மற்றும் கலோரியைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் ஒன்று தான் மஞ்சள். இதில் உள்ள குர்குமின் எனப்படும் வேதிப்பொருள் இரத்தத்தைச் சுத்திகரிக்கிறது.
  • மேலும் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உறுதுணையாக உள்ளது.

இஞ்சி:

GInger

  • அனைவரின் வீடுகளில் பயன்படுத்தப்படும் மசாலாக்களில் ஒன்று தான் இஞ்சி. இஞ்சி இடுப்பழகி என்று கூறுவதற்கு ஏற்ப, இவற்றை நம்முடைய உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் எடைக் கட்டுப்பாட்டுடன் உள்ளது.
  • உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கும் இஞ்சி நல்ல தீர்வாக அமைகிறது. இதோடு வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்புக்கு பேருதவியாக உள்ளது.
  • தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் இஞ்சி சாறு குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கருமிளகு:

Black pepper

  • சைவ மற்றும் அசைவ உணவுகளில் சுவையை அதிகரிக்கும் மசாலாக்களில் ஒன்று கருமிளகு. இதில் உள்ள பைபரின் எனப்படும் கலவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
  • மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு மற்றும் வயிற்றில் உள்ள தொப்பையைக் குறைக்க உதவுகிறது.

பெருஞ்சீரகம்:

  • எடை இழப்பிற்கு உதவும் மசாலாக்களில் ஒன்று தான் பெருஞ்சீரகம். இதில் உள்ள வைட்டமின்ஏ, சி மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.
  • இதோடு மட்டுமின்றி நல்ல செரிமானத்திற்கும் பயனளிக்கும் என்பதால், எடை இழப்பிற்கு உதவியாக உள்ளது.

வெந்தயம்:

  • உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வெந்தயம் சிறந்த தீர்வாக அமையும்.
  • இவற்றை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அதிக கலோரிகளை உட்கொள்ளுதலைக் குறைக்க உதவும்.
  • வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள கொழுப்புகள் வேகமாக கரைய உதவக்கூடும். இதனால் எடையை அதிகரிப்பு கட்டுக்குள் இருக்கும். உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

மேலும் படிக்க:பெண்களுக்கு புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் உணவுகளின் லிஸ்ட்!

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP