தங்களுக்கு மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவருக்காகவும் எப்போதும் கடிகாரம் போல் நிற்காமல் சுற்றுபவர்கள் தான் பெண்கள். கணவன், குழந்தைகள், பெற்றோர்கள் என ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து உணவுகளைப் பரிமாறும் பெண்கள், தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவறிவிடுகிறார்கள். இதனால் தான் 30 வயதை அவர்கள் எட்டியதும் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடுகிறது.
சரிவிகித உணவுகளை உட்கொள்ளாததால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் இந்த உணவுப் பொருள்களைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோ அதற்கான லிஸ்ட் இங்கே..
மேலும் படிக்க: வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட்! உடல் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது
30 வயதை அடைந்தவுடன் பெண்களுக்கு முதுகு வலி பிரச்சனையும் உடன் சேர்த்துவிடும். எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மற்றும் புரதச்சத்து அத்தியாவசியமான ஒன்று. எனவே ஒவ்வொரு பெண்களும் தினமும் பால் குடிக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு பால் அருந்துவது பிடிக்கவில்லை என்றால்,அதற்கு மாற்றாக மோர் அல்லது தயிர் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ளவும்.
உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம், இரும்புச்சத்து, தாமிரம், மாங்கனீசு உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பூசணி விதைகளில் உள்ளது. எனவே பெண்கள் தினமும் பூசணி விதைகளைத் தினமும் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பல உடல் நலப்பிரச்சனைகளைத் தடுக்கிறது.
மேலும் படிக்க: பெரிய நெல்லிக்காயில் இத்தனை அற்புத நன்மைகள் உள்ளதா?
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தில் பிிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் அதிகமாக உட்கொள்ளும் போது, மார்பக புற்றுநோய் பாதிப்பைத் தடுக்க முடியும் எனவும் நிரூபணமாகியுள்ளது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]