நாம் ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்றால், நம் செரிமான மண்டலம் சீராக இயங்க வேண்டும் என்பது அவசியம் ஆகிறது. பசியின்மை, சாப்பிட்ட பிறகு ஏற்படும் வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை, தேவையில்லாமல் வயிறை காலியாக வைத்து இருப்பது போன்ற அறிகுறிகள் தான் செரிமான மண்டலம் மோசமாக இருப்பதை காட்டுகிறது. பல சமயங்களில் மோசமான செரிமானத்தை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம். ஆனால் உண்மையில் அவ்வாறு விடுவது தவறு. செரிமானம் சரியான முறையில் இருக்க வேண்டும் என்றால், நாம் சாப்பிடும் உணவு மற்றும் பருகும் பானமும் சரியானதாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை சரியாக இல்லாத பட்சத்தில், நம் செரிமான அமைப்பு பழுதடையும்.
நம் செரிமான சக்தியை அதிகரிக்க நம் வீட்டின் சமையல் அறையிலேயே இது போன்ற பல்வேறு பொருட்கள் இருக்கிறது. உங்களுக்கும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது என்றால், அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று நினைத்தால், நிச்சயம் இந்த கட்டுரை உங்களுக்காக மட்டுமே. உணவியல் நிபுணர் மனோலி மேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பற்றிய பயனுள்ள தகவல்களை நமக்கு தருகிறார். இதை பற்றி நாம் இன்று தெரிந்து கொள்ளலாம்.
இதுவும் உதவலாம்:வெள்ளை வெங்காயம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?
தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் செரிமானமின்மைக்கான முக்கிய காரணம் ஆகும். நீர்ச்சத்து குறைவதும் செரிமான கோளாறுக்கான ஒரு காரணம் ஆகும். நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டால் வயிற்று போக்கு, தலைவலி மற்றும் வயிற்றுவலி உண்டாகும். போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்தாவிட்டால், வயிறு முழுமையாக சுத்தம் செய்ய படாது. உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? நாம் போதுமான அளவில் தண்ணீர் குடித்தாலும் சில சமயம் நமக்கு நீர்ச்சத்து குறைவது மற்றும் செரிமான பிரச்சினை ஏற்படும். இதற்கு காரணம் என்னவென்றால், நீங்கள் தண்ணீர் அதிகம் குடித்தாலும், உங்கள் உடலால் அதை முழுமையாக உறிஞ்ச முடியாத சூழ்நிலை இருக்கும். இந்த பிரச்சினையை நாம் எளிதாக தீர்க்கலாம். இதற்கு நாம் செய்ய வேண்டியது, சில ஊட்டச்சத்துக்களான தாதுக்களை நாம் தண்ணீரில் சேர்க்க வேண்டும். இவ்வாறு தாதுக்கள் சேர்த்து தண்ணீர் குடிக்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்படாது மற்றும் செரிமான கோளாறும் ஏற்படாது.
இதுவும் உதவலாம்:கோடை காலத்திற்கு ஏற்ற ஆயுர்வேதிக் டயட் டிப்ஸ்
நம் செரிமான கோளாறுக்கு முக்கிய சிக்கலாக இருப்பது நீர்ச்சத்து குறைவு தான். நம் உடல் தண்ணீரை முழுமையாக உறிஞ்ச வேண்டும் என்றால், அதில் சிறிது தாதுக்கள் சேர்க்க வேண்டும். எடு- கடல் உப்பு. நீங்கள் அனைவரும் செய்ய வேண்டியது ஒரு சிட்டிகை கடல் உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்ய சில நாட்களிலேயே கண்கூடான வித்தியாசத்தை செரிமான மண்டலத்தில் காண முடியும். கடல் உப்பு கல் உப்பை விட ஆரோக்யம் ஆனது. நீர்ச்சத்து குறைபாட்டிற்கு மட்டும் அல்லாமல், வாய் வழி ஆரோக்யத்திற்கும் இது நலம் பயக்கிறது. கடல் உப்பில் அதிகமான கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது நம் சருமத்திற்கும் நல்லது செய்யக்கூடியது. உணவில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வரும் முன் மருத்துவ ஆலோசனை அவசியம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]