இன்றைய சூழலில் என்ன தான் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வைத்தாலும், உடல் நலம் ஆரோக்கியமாக இல்லையென்றால் சின்ன சின்ன விஷயங்களைக் கூட செய்ய முடியாது. உதாரணமாக பிடித்த இனிப்புகள், உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும், ஐய்யோ சர்க்கரை இருக்கு எனக்கு வேண்டாம் என்ற வார்த்தைகளைத் தான் அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு எண்ணெய் பலகாரங்கள் என்றால் அழற்சி தான். இது மட்டுமின்றி மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பல கலாச்சார மாற்றங்கள் பெயர் கூட இல்லாத பல நோய்களை நமக்குத் தருகிறது.
இது போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் உங்களது வாழ்க்கை முறையில் பின்பற்ற வேண்டும் என்று தெரிந்துக் கொள்வதற்கு ஆவல் உள்ளதா? அப்படியென்றால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இந்த கட்டுரையைக் கொஞ்சம் வாசித்திட்டு போங்க.
ஆரோக்கியமாக இருப்பதற்கான டிப்ஸ்கள்:
- உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்க வேண்டும் என்றால், புரதங்கள், தாதுக்கள், இரும்பு, வைட்டமின்கள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். உணவில் முதலில் மாற்றங்கள் கொண்டு வந்தால் மட்டுமே பல நோய்களை நீங்கள் தடுக்க முடியும். குறிப்பாக பழங்கள், காய்கறிகள், கீரைகள், பால் , இறைச்சி நிறைந்த உணவுகளைக் கட்டாயம் உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- ஊட்டச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது ஒரு புறம் இருந்தாலும் சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் காலை உணவை 9 மணிக்குள் சாப்பிட வேண்டும். இதில் ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காலை உணவு தான் நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான கலோரிகளை உங்களுக்கு வழங்குகிறது.
- காலை எழுந்தவுடன் சூடான தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் நீங்கள் பின்பற்றும் போது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
- உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க தூக்கம் மிகவும் இன்றியமையாதது. எனவே நீங்கள் தினமும் இரவில் 7-8 மணி நேரமாவது இரவு தூக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- மன அழுத்தமும் உடல் நலத்தைப் பாதிக்கும் என்பதால், மனதிற்குக் கஷ்டம் தரக்கூடிய விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, பிடித்த இடங்களுக்குச் செல்வது போன்ற பல விஷயங்களில் ஈடுபடுவது நல்லது.

இது போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொள்ளும் போது உடலும் மனதும் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கும். எனவே இதை முறையாகக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation