இன்றைய நவீன உலகத்தில் இயந்திரம் போன்று சுற்றித் திரியும் பலருக்கு பல்வேறு விதமான உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதோடு அலுவலக பணி, குடும்ப சூழல், குழந்தைகளைக் கவனிப்பது, படிப்பில் முன்னேற்றமின்மை போன்ற பல காரணங்களால் மக்களில் பலருக்கு மன அழுத்தம், பதட்டம், மன சோர்வு போன்ற பல்வேறு விதமான மன நல பாதிப்புகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.
இந்த பாதிப்பைத் தவிர்க்க என்ன தான்? மருத்துவமனைகளில் சென்று சிகிச்சைகள் பெற்றுக் கொண்டாலும் மனதளவில் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இல்லையென்றால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. அதே சமயம் மன நல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த சூழலில் உங்களின் மன நிலையை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கட்டாயம் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். இதோ வாழ்க்கையில் எப்போதும், மகிழ்ச்சியுடனும் இருப்பதற்கு நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.
மேலும் படிக்க: அம்மாக்களை மட்டும் ஏன் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள் தெரியுமா?
நம்முடைய வாழ்க்கையில் என்ன தான் பிஸியான சூழலில் பயணித்துக் கொண்டிருந்தாலும், உடல் நலத்திற்கு எந்தளவில் அக்கறையுடன் இருக்கிறீர்களோ? அதே போன்று தான் மன நலத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனதளவில் கவலைப்பட என்ன காரணம்? இதிலிருந்து விடுபடுவதற்கு என்னவெல்லாம் நீங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து யோசனைகளை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை என்ன காரணத்தினால் மனதில் கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது? என்பதைத் தெரிந்துக்கொள்ள முடியவில்லையென்றால் ஒரு முறையாவது மன நல ஆலோசகரின் அறிவுரைகளைக் கேட்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனைகள் பல நேரங்களில் உங்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இயந்திர உலகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு மனதை அமைதிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவே செய்யாது. எனவே மாதத்திற்கு ஒருமுறையாவது நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து வெளியூர் அல்லது பிடித்த இடங்களுக்குப் பயணிக்கவும். புதிய இடங்களுக்குப் பயணிப்பது உங்களின் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும். சுற்றுலா செல்வதற்கு உங்களால் முடியவில்லையென்றாலும் உங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். வீட்டிலேயே அனைவரும் ஒன்றாக சாப்பிடுங்கள், சந்தோஷமாக பேசி மகிழுங்கள். ஏதேனும் கஷ்டங்கள் இருந்தால் கொஞ்சம் மனம் விட்டு பேசுவதால் பாரம் குறைந்து விடும்.
மேலும் படிக்க: ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கணுமா? தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போங்க போதும்!
மனதை புத்துணர்ச்சியுடன் வைப்பதற்கு மற்றொரு முக்கியமான விஷயம் சீரான உணவும், நல்ல தூக்கமும் தான். ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உங்களது உணவு முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல சத்தான ஆகாரங்கள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதால் எந்த உடல் பாதிப்புகளும் ஏற்படாது. உடல் பாதிப்புகள் இல்லாமல் இருந்தாலே மன ஆரோக்கியமும் மேம்படும். தினசரி 7-8 மணி நேரம் தூக்கம் இல்லையென்றால் மனம் சோர்வாகிவிடும். எனவே நல்ல தூக்கத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யவும்.
Image souece - Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]