அம்மாக்களை மட்டும் ஏன் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொரு அம்மாக்களும் உடல் ரீதியாவும், உணர்வு ரீதியாகவும் தொப்புள் கொடி வழியாக உறவுகளை ஆறத் தழுவ ஆரம்பிக்கின்றனர்.

mothers loving her daughter

குழந்தை வளர்ப்பில் அப்பா- அம்மா இருவருக்கும் பெரும் பங்கு உள்ளது. ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் அவர்களின் அம்மாக்களின் மீது தனி பாசம் இருக்கும். என்ன தான் கோபத்தில் திட்டினாலும், அடித்தாலும் என் அம்மாவைப் போன்று வருமா? என்ற வார்த்தைகளோடு அவர்களின் மீது தான் அளாதிப் பாசம் வைப்பார்கள். ஏன் குழந்தைகளுக்கு அம்மாக்களை மட்டும் பிடிக்கிறது? அதற்கானக் காரணம் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

good mom

அம்மாக்களை அதிகம் விரும்பும் குழந்தைகள்:

பெண்கள் ஒன்பது மாதம் குழந்தைகளைக் கருவில் சுமக்கும் காலத்தில் இருந்தே தாயுக்கும் சேயுக்கும் இடையேயான உறவு வலுப்பெற ஆரம்பிக்கிறது. உடல் ரீதியாவும், உணர்வு ரீதியாகவும் தொப்புள் கொடி வழியாக உறவுகளை ஆறத் தழுவ ஆரம்பிக்கின்றன. உலகில் பிறக்கும் எந்தக் குழந்தையாக இருந்தாலும் முதலில் பார்க்கும் நபர் அவர்களின் அம்மாக்கள். இந்த முகம் எப்போதும் காலத்திற்கு அழியாது என்பதால் அவர்களின் மீதான அன்பும் சற்றும் குறைய வாய்ப்பே இல்லை.

குழந்தைப் பிறந்தவுடன் மார்பில் அணைந்துப் பால் குடுக்கத் தொடங்குவது முதல் அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குவதில் தாய்க்கு நிகர் யாரும் இல்லை. என்ன வேண்டும்? என்ன சாப்பிடுவார்கள்? என்பதை அறிந்துக் கொண்டு செய்வதில் ஆகச் சிறந்தவர்கள் தாய். குழந்தைகள் கேட்காமல் அன்பை செலுத்தும் தாய் எப்போதுமே அவர்களுக்குப் பெரும் வரமாகத் தான் இருப்பார்கள்.

mother and son love

கருவில் இருக்கும் போதே, ஒரு குழந்தை தனது தாயை நம்ப ஆரம்பிக்கிறார். மேலும் மற்றவர்களை வாழ்க்கையில் நம்ப முடியுமா? யார் எப்படிப்பட்டவர்கள்? என்பதை தாய் மூலம் அறிந்துக் கொள்வதால் குழந்தைகள் எப்போதுமே நேர்மறையான எண்ணங்களைப் பெறுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்களை அவர்களது அப்பாக்கள் தான் மேற்கொள்வார்கள். ஆனாலும் குழந்தைகளுக்கு பொதுவாக தங்கள் அப்பாக்களுடன் அதிக பிரச்சனையில் இருப்பதாக உணர்கிறார்கள். எப்போது பார்த்தாலும் திட்டுவது, எரிச்சல் அடைவது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் அப்பாக்களிடமிருந்து கொஞ்சம் விலகி இருக்கிறார்கள்.

ஆண்களைப் போன்று பெண்களும் பணிக்குச் சென்றாலும், குழந்தைகளுக்குக் கொஞ்சம் கூட அன்பை வழங்குவதில் பஞ்சம் வைக்காதவர்கள் தாய் தான். அலுவலகம் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கான உணவைச் சமைப்பது, ஆசையாக ஊட்டி விடுவது, தூங்க வைப்பது என அனைத்து வேலைகளையும் தனக்காகத் தான் அம்மாக்கள் செய்கிறார்கள் என்ற எண்ணம் குழந்தைகளிடத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.

மேலும் படிக்க:உங்களது குழந்தைகளை வெற்றியாளராக மாற்றுவதற்கான ரகசியம் இது தான்!

இதுபோன்ற சூழலில் தான், தன்னுடைய அம்மாக்கள் எந்த சூழலிலும் தனக்காக மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள் என்ற எண்ணம் சிறு வயதில் இருந்தே ஆழமாக பதிகிறது. இதனால் தான் குழந்தைகள் தனது அம்மாக்களிடம் பாசத்தையும், நெருக்கத்தையும் அதிகம் காட்டுகிறார்கள்.

Image source- Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP