சளி மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும் மூலிகைகள்!!!

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்படும் பருவம் இது. இவற்றிலிருந்து  நிவாரணம் தரும் மூலிகைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

if you use these herbs ma

குளிர்காலத்தில் அடிக்கடி சளி, உடல் வலி, காய்ச்சல், மூக்கடைப்பு ஆகிய பொதுவான பிரச்சனைகள் ஏற்படும். அப்படி ஆகும் போது, பலர் உடனடியாக மருத்துவரிடம் சென்று மருந்து சாப்பிட்டு குணமடைகிறார்கள். சில சமயங்களில் பருவகால சளி, இருமல் பிரச்சனைகளுக்கு இந்த மருந்துகள் கூட தேவையில்லை.

மருத்துவர்கள் நமக்குக் கொடுக்கும் மருந்துகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (ஆன்டிபயாடிக்ஸ்) ஆகும், அதை மருத்துவர் கூறும் அளவில் எத்தனை நாட்கள் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறதோ அத்தனை நாட்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும். சிலர் அதை 1-2 முறை மட்டும் சாப்பிட்டு விட்டு, மீண்டும் நோய் வந்தவுடன் சாப்பிடுகின்றனர். அடிக்கடி இந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எடுத்துக் கொண்டால், இது நம் உடல் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எதிர்ப்பை உருவாக்க வாய்ப்புள்ளது, மேலும் இது நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் செயல்திறனைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, அதற்கு பதிலாக வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கலாம். சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும் சில மூலிகைகள் உள்ளன. குளிர்காலத்தில், இந்த மூலிகைகளை வாங்கி நம் சமையலறையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் சளி மற்றும் இருமல் ஏற்படும் போதெல்லாம், உடனடியாக நிவாரணம் பெற முடியும். சில நாட்களுக்கு பிறகும் உங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், மருத்துவரைப் பார்க்கவும்.

பூண்டு

if you use these herbs

பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, இது நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அதன் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் சளி, இருமல் அறிகுறிகளை குறைக்கும். ஆரம்ப கட்டத்தில் நோய்வாய்ப்படாமல் இருக்கவும் இது உதவும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பூண்டை வறுத்து உணவுடன் எடுத்துக் கொள்ளலாம் அல்லது சமைக்கும் போது உணவில் சேர்க்கலாம். பூண்டு சூடான விளைவைக் கொண்டுள்ளது. எனவே இது உடலை வெப்பமாக்குகிறது மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

ஓமம்

ஓமம், வைரஸ் எதிர்ப்பு, ஆன்டிபயாடிக், நுண்ணுயிர் எதிர்ப்பு, டிகோங்கஸ்டென்ட், எக்ஸ்பெக்டோரண்ட், புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் ஆகியவற்றை கொண்டது. இவை சளி, காய்ச்சலை எதிர்த்துப் போராட உதவும். தைம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். இதை பயன்படுத்தி டீ தயாரித்து குடிக்கலாம், மேலும் இதில் இஞ்சியையும் சேர்த்துக்கொள்ளலாம், இதனால் தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைக்கும். இது இருமலில் இருந்து நிவாரணம் தருவதோடு, மூக்கடைப்பையும் சரிசெய்ய உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: வீட்டிலிருந்தபடியே இரத்த சோகையை விரைவில் குணப்படுத்துவது எப்படி?

ரோஸ்மேரி

if you use these herbs

ரோஸ்மேரி என்பது சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். இதல் உள்ள வைரஸ் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் தலைவலியை குறைக்க உதவுகிறது. இதன் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து நீராவியை சுவாசித்தால் மூக்கடைப்பு மற்றும் மார்பு நெரிசல் நீங்கும். இதை டீயில் சேர்த்துக் குடித்தால் வலி குறையும். இது இரத்த ஓட்ட அமைப்பை தூண்டுவதன் மூலம், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

துளசி

if you use these herbs

துளசி இருமல், சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளைக் குறைக்க உதவும் ஒரு மூலிகையாகும். சாலடுகள், சூப்கள் மற்றும் பருப்பு வகைகளை அலங்கரிக்கவும் இது பயன்படுத்துவது. இது மூச்சுக்குழாய் அழற்சி, காய்ச்சல் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது, அதே நேரத்தில் அதன் இலைகளை மென்று சாப்பிட்டால் சளியில் இருந்து நிவாரணம் பெறலாம். தொண்டை வலியைக் குறைக்க, வெதுவெதுப்பான நீரில் துளசி இலைகளை போட்டு வாய் கொப்பளிக்கலாம்.

இந்த மூலிகைகளை உட்கொள்வதன் மூலம் சளி, சளி, இருமல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். ஆனால் இந்த மூலிகைகளால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதை உட்கொள்வதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகவும்.

இந்த பதிவும் உதவலாம்: காலை உணவைத் தவிர்ப்பதால் உண்டாகும் ஆபத்துகள்!!!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP