herzindagi
pcos problem

Herbal Tea for PCOS: PCOS பாதிப்பால் கர்ப்பம் தரிக்க முடியலையா? இந்த மூலிகை தேநீர் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்

மூலிகை தேநீர் PCOS ஐ நிர்வகிப்பதோடு பல நன்மைகளையும் கொண்டுள்ளது  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்
Editorial
Updated:- 2023-07-26, 18:07 IST

ஒரு கப் மூலிகை தேநீர் குடித்து உங்கள் காலை தொடங்கினால், நீங்கள் ஒரு காரியத்தையாவது சரியாக செய்கிறீர்கள். நவீன மருத்துவம் இல்லாத காலத்தில் நம் அனைவரும் ஆயுர்வேத மருத்துவத்தை நம்பியிருந்தோம். நல்ல ஆரோக்கியமாகவும் இருந்தோம். இந்த தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க்கும், மன அழுத்தத்தை சமாளிக்கும். ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் டிக்ஸா பவ்சர் சவாலியா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மூலிகை தேநீர் செய்முறையை பாகிர்ந்துள்ளார்.

 

இந்த பதிவும் உதவலாம்: சுவை மற்றும் சில வாசனைகளால் கர்ப்பிணிப் பெண்கள் அவதிப்படுகிறீர்களா... அதை கட்டுப்படுத்த சில வழிகள்

மூலிகை  தேநீருக்கு  தேவையான பொருட்கள்

  • 1 டீஸ்பூன் இடிச்ச சீரகம்
  • 1 டீஸ்பூன் நசுக்கிய ஏலக்காய் 
  • 1 தேக்கரண்டி உலர்ந்த ரோஜா இதழ்கள்
  • 1 டீஸ்பூன் பெருஞ்சீரகம் 
  • 1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்

மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

500 மில்லி தண்ணீரில், அனைத்து விதைகள் மற்றும் ரோஜா இதழ்களை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி கொதிக்க வைத்தி தேநீர் போல் காலையில்  குடிக்கவும். வெறும் வயிற்றில் அல்லது உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அல்லது பின் தேநீர் அருந்தலாம். 

PCOS க்கான மூலிகை தேநீரின் நன்மைகள்

தேநீர் PCOS ஐ நிர்வகிப்பதில் உதவியாக இருப்பது மட்டுமல்லாமல் மாதவிடாயை சமாளிக்க உதவுகிறது. அமிலத்தன்மை, வயிறு உப்புசம், மனநிலை மாற்றங்கள், சோர்வு, பதட்டம், உஷ்ணம், தூக்கமின்மை, அஜீரணம், ஒற்றைத் தலைவலி மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றுடன் போராடுபவர்கள் இந்த டீயை தினமும் உட்கொள்ளலாம்.

மூலிகை தேநீரில் உள்ள பொருட்கள் எவ்வாறு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும் என்பதை இங்கே காணலாம்.

பெருஞ்சீரகம் 

funnel for pcos

புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜனுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த பெருஞ்சீரகம் நல்லது. அவை மாதவிடாயை சீராக்கவும், புத்துணர்ச்சியூட்டவும் உதவுகிறது.

கொத்தமல்லி 

தேநீரில் உள்ள கொத்தமல்லி விதைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், ஹார்மோன் சமநிலையை மேம்படுத்தும் மற்றும் உடலை உற்சாகப்படுத்தும். சூடான ஃப்ளாஷ் போன்ற மாதவிடாய் அறிகுறிகளையும் அவை குறைக்கலாம்.

உலர்ந்த ரோஜா இதழ்கள்

rose patel for pcos

உலர்ந்த ரோஜா இதழ்கள் உடலை குளிர்விக்க உதவுகிறது. அவை தூக்கத்தை முறையாக வரவழைக்க உதவுகிறது.

ஏலக்காய்

ஏலக்காய் அடிக்கடி பசியைத் தடுக்கும், மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.

சீரக விதைகள் 

அஜீரணம், அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும். சீரகம், ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிரம்பு, கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்களை உங்கள் உணவில் சிறிய அளவில் உட்கொள்வது உணவுகளின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒரு சிகிச்சை மதிப்பையும் சேர்க்கிறது. 

 

இந்த பதிவும் உதவலாம்:  கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்?

நீங்கள் இந்த மசாலாப் பொருட்களை உணவில் சேர்க்கும்போது, அவை ஒரு நபரின் உணவில் இருந்து அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை பெற உதவுகின்றன. அவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]