கோடை காலத்தில் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க ஆரோக்கியமான உணவுமுறை மிகவும் அவசியம். சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் செல்லும்போது சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீம் பயன்படுத்துங்கள். அதே போல கொளுத்தும் வெயிலில் உடலை ஈர்ப்பத்ததுடன் வைத்திருக்க அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை கோடை காலத்தில் உட்கொள்வது உங்கள் உடலை குளிர்ச்சிப்படுத்த உதவும். உணவுமுறை மட்டுமின்றி கோடை காலத்தை சமாளிக்க அத்தியாவசியமான சில டிப்ஸ் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த கோடை காலத்தில் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்பதால் நன்மையே தவிர, அதில் எந்த தீமையும் இல்லை. இருந்தாலும் அசுத்தங்கள் படிந்து நம் சருமத்தில் அலர்ஜி ஏற்படும் என்பதால் அடிக்கடி குளித்தல் நல்லது. முக்கியமாக வியர்வை உலர்ந்த பின்பு குளிக்க வேண்டும்.
கோடை காலத்தில் வெளியில் சுற்றி வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் டார்க் நிற உடைகளை தவிர்த்து, கண்ணுக்கு உறுத்தாத வெளிர் நிற ஆடைகளை அணிவதால் வெயிலின் தாக்கத்திலிருந்து சிறிது தப்பிக்கலாம்.
மேலும் படிக்க: சுட்டெரிக்கும் கோடை வெயில்;உடல் சூட்டைத்தணிக்க உதவும் குளிர்பானங்கள்!
வெயில் காலங்களில் காலையில் பீட்ரூட் ஜூஸ் அருந்துவது உடலுக்கு நல்லது. இது உடலின் வறட்சியை தவிர்த்து உணவுகள் எளிதில் செரிமானமாகும். இதனால் வயிறு லேசாக இருக்கும்.
கொளுத்தும் வெயிலில் வெளியே செல்லும் போது கறுப்பு நிற குடை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வெளிர் நிற குடைகளை பயன்படுத்துவதால் வெப்பம் அதிகம் உள் வராது இருக்கும்.
கோடை காலத்தில் நீங்கள் உட்கொள்ளும் உணவில் தினமும் தக்காளி, வெள்ளரி, தர்பூசணி, கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடல் சூடு தணிவதுடன், உணவு எளிதில் செரிமானமாகும். மேலும், சூட்டினால் ஏற்படும் வயிற்றுக் கோளாறு பிரச்சனைகளும் நீங்கும். அதே போல உணவில் நெல்லிக்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். இது பசியைத் தூண்டும். கோடையில் உப்பு, எண்ணெய், காரம், புளிப்பு சேர்த்த உணவு வகைகளை தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, இனிப்பு, துவர்ப்பு, கசப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பித்தம் சேராமல் தடுக்கும்.
தினமும் ஒரு கீரை வகையை உணவில் சேர்த்துக் கொள்வது நமக்கு நாமே வைத்தியம் பார்த்துக் கொள்வதற்கு சமம். ஏன் என்றால் எளிதில் செரிமானமாகக்கூடிய கீரை உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கும். குறிப்பாக இரவில் மட்டும் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாதுளம், சாத்துக்குடி, பூவன்பழம், நேந்திரம் பழம், மலைப்பழம், சப்போட்டா, ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை பிழிந்தோ அல்லது பழமாகவோ சாப்பிடுவது நல்லது. கோடையில் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும் என்பதால் வெள்ளரிக்காய், தக்காளி, பசலை கீரை கொண்டு சாலட் செய்து அடிக்கடி சாப்பிடலாம்.
பொதுவாக குளிர்சாதனப்பெட்டியில் வைத்த நீரை குடிப்பதைத் தவிர்க்கவும். இது உடலுக்கு கேடு விளைவிக்கும். சோடா போன்ற குளிர் பானங்களை குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இதில் சேர்க்கப்பட்டிருக்கும் செயற்கைச் சர்க்கரை உடலுக்கு கேடு விளைவிக்கும். உலர் திராட்சை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது தான். ஆனால் கோடை காலத்திற்கு நல்லது அல்ல. இதை சாப்பிடுவதால் உங்கள் உடல் உஷ்ணம் அதிகரிக்கும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]