குளிர்காலத்தில் உடல்நலன் காக்கும் நெல்லிக்காய், தேன்

குளிர்காலத்தில் அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது எனக் கவலையா ? இந்த இரண்டு பொருட்கள் உங்கள் சமையலறையில் இருந்தால் போதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.

Main hm

குளிர்காலத்தில் பொதுவாகவே முடி உதிர்வு, சுவாசக் கோளாறு, சளி, இருமல், ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். இந்த குளிர்காலத்தில் பாஸ்ட் ஃபுட் அடிக்கடி உண்டு உடல்எடை கூடியிருக்க வாய்ப்புண்டு. எனவே குளிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு வீட்டிலேயே எப்படி தீர்வு காணலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் சமையலறையில் உள்ள இரண்டு பொருட்களே போதும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு.

முடி உதிர்வுக்கு வீட்டு வைத்தியம்

  • நெல்லிக்காய்
  • ஒரு ஸ்பூன் தேன்

செய்முறை

  • நெல்லிக்காய்களை 4-5 துண்டுகளாக நறுக்கி அனைத்தையும் காற்றில் புகாத ஜாடியில் போடுங்கள்
  • அதன் பிறகு ஒரு ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்
  • இதில் 3-4 துண்டுகளை பெரியவர்கள் தினமும் சாப்பிடலாம். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம். வெறும் வயிற்றில் இவற்றை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

நெல்லிக்காயின் பலன்கள்

 hm

  • நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை அறிந்தே நம்முடைய மூதாதையர்கள் அதை சாப்பிட்டு வந்துள்ளனர்.
  • நெல்லிக்காயில் நிறைந்துள்ள வைட்டமின் சி சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
  • இரத்த சுத்திகரிப்பு, முடி முன்கூட்டியே நரைப்பதை தடுப்பது, முடி வளர்ச்சி ஊக்குவிப்பு ஆகியவற்றுக்கு உதவிகரமாக இருக்கும்.
  • முகத்தில் பறு மற்றும் மந்தமான தன்மையை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்தும், முகத்தில் இயற்கையான பளபளப்பை மீண்டும் பெற உதவும்.

தேன் தரும் பலன்கள்

 hm

  • இயற்கை இனிப்பான் என்றழைக்கப்படும் தேன் பல சுகாதார நிபுணர்களால் சர்க்கரைக்கு மாற்றாக பரிந்துரைக்கப்படுகிறது.
  • தேன் ஜீரணிக்க இலகுவானதும் கூட என நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • இதை எடை இழப்பு பானங்களுடன் உட்கொள்வது நல்லது. இப்படி அருந்தினால் உச்சந்தலைக்கு அதிக ஊட்டம் கிடைக்கும். உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்க முடியும்.
  • தேனின் ஈரமூட்டும் பண்புகள் சருமத்திற்கு மிகவும் நல்லது.

நீரிழிவு நோய் பிரச்சினை இருந்தாலும் ஒருவர் தினமும் மூன்று முறை தேன் எடுத்துக்கொள்ளலாம். மேலும் சந்தேகங்கள் இருந்தாலும் மருத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP