herzindagi
Main sk

Sweet potato : ஊட்டச்சத்துகளின் அரசன் “சர்க்கரைவள்ளி கிழங்கு”

சர்க்கரைவள்ளி கிழங்கை ஊட்டச்சத்தின் ரத்தினம் என அழைக்கலாம். இதற்கான காரணம் என்ன ? குளிர்காலத்திற்கு ஏன் மிகவும் உகந்தது என்ற தகவல்கள் இங்கே...
Editorial
Updated:- 2023-12-20, 16:27 IST

குளிர்காலத்தில் நமது உடல் வெப்பத்தையும், கதகதப்பூட்டும் உணவுகளையும் தேடும். அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவுகளையும் நாம் தவிர்த்து விடக் கூடாது. குளிர்காலத்தில் எளிதில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு மிகச் சிறந்த ஆரோக்கிய உணவாகும். இதில் அதிக ஊட்டச்சத்து இருக்கிறது. சர்க்கரை வள்ளி கிழங்கு சுவையானது மட்டுமல்ல பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு 

சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் (Minerals) நிரம்பியுள்ளது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பதிலும், ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதிலும், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 sk

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பும் பண்புகள்

குளிர்காலத்தில் பருவகால நோய்களின் அச்சுறுத்தல் அடிக்கடி வரும் நிலையில் சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அதிகளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஒரு வலுவான நோய் எதிர்ப்பு அமைப்புக்குப் பங்களிக்கின்றன. வைட்டமின் ஏ நோய் எதிர்ப்புக் கிருமிகளுக்கு எதிரான ஒரு தடையாகச் செயல்படுகிறது. அதே நேரத்தில் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் உற்பத்தியை ஆதரிக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. சோம்பலையும் எதிர்த்துப் போராடுகிறது.

மேலும் படிங்க ஆரோக்கியமான காலை உணவுக்கு தேடலா ? ராகி சில்லா சாப்பிடுங்க

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு

சர்க்கரை வள்ளி கிழங்கில் இயற்கையான இனிப்பு இருந்தாலும் இது இரத்த சர்க்கரை அளவில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாகவும் அமைகிறது.

செரிமான ஆரோக்கியம்

சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கவும், சீரான குடல் நுண்ணுயிரியை ஆதரிக்கவும் உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.

மேலும் படிங்க உடல் ஆரோக்கியத்தை பெருக்கும் வெல்லம்

இதயத்திற்கு நன்மை 

இந்தக் கிழங்கில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால் இருதய ஆரோக்கியத்திற்கும் நன்மைகள் கிடைக்கின்றன. இரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவி இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. 

உடல்எடை மேலாண்மை

சர்க்கரை வள்ளி கிழங்கில் இரண்டு வகையான நார்ச்சத்துகளும் உள்ளன.இவை குளிர்கால மாதங்களில் உடல்எடை மீது அதிக அக்கறை உள்ளவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]