குளிர்காலத்தில் படுக்கையை விட்டு வெளியேற வேண்டும் என நினைத்தாலும் சோம்பேறி தனமும், சுற்றி இருக்கும் குளிர்ந்த சூழலும் உங்களை எந்திரிக்க விடாது. ஜிம் அல்லது ஜூம்பா வகுப்பிற்கு செல்ல முடியவில்லையா ? வேறு வழியே இல்லை, பிடித்தமான காஃபியை குடித்துவிட்டு எவ்வளவு நேரம் தூங்க முடியுமோ அவ்வளவு நேரம் தூங்கவும். குளிர்காலத்தில் நீங்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக உணர்கிறீர்களோ அதே அளவிற்கு ஃபிட் ஆகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். இதற்கு உங்களுக்கு ஊக்கம் தேவைப்படுகிறது என்றால் எங்களிடம் சில எளிய குறிப்புகள் உள்ளன.
ஆரோக்கியமான வாழ்விற்கு சமச்சீர் உணவு
இந்த சோம்பேறி பருவத்தில் உங்கள் சுவை மொட்டுகள் சத்து இல்லாத ஃபாஸ்ட் புட் போன்ற உணவுகளை சாப்பிட தூண்டும்.அதே நேரம் குளிர்காலத்தில் நீங்கள் எளிதில் நோய்வாய்ப்பட கூடும் என்பதால் நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட வயிற்றுக்கு சரியான உணவளிப்பது மிக முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது.
உங்கள் உணவில் அதிகமான காய்கறிகளைச் சேர்த்து பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை அதிகம் கொண்ட உணவு சாப்பிடுவதை குறைக்க தொடங்கவும். இந்தக் குளிர்காலத்தில் காலை உணவை ஒருபோதும் தவிர்க்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கக் காலை உணவு முக்கியமாகும்.
மேலும் படிங்கAlcoholism : சரக்கு அடிக்காதீங்க பாஸ்! ஆபத்து ரொம்ப அதிகம்
கார்போஹைட்ரேட் தேர்வு
உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட்டுகளை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும். உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் இருந்தால் அவை ஆரோக்கியமற்ற வாழ்விற்கு வழிவகுத்துவிடும். ஏனென்றால் கார்போஹைட்ரேட்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இதனால் உங்கள் உடல்எடை அதிகரிக்கும். அதனால் உட்கொள்ளும் உணவில் கார்போஹைட்ரேட் அளவை கண்காணிக்க வேண்டும்.
முடிந்தவரை கார்போஹைட்ரேட்டுகளை காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பெற்றிட முயற்சி செய்யுங்கள். சாதாரண ரொட்டிக்கு (Bread) பதிலாகக் கோதுமை ரொடி சாப்பிடலாம். உணவு பழக்கத்தை மாற்றுவதனால் குளிர்காலத்தை ஆரோக்கியமாக அனுபவிக்க முடியும். கார்போஹைட்ரேட்கள் உங்களுக்கு எதிரி கிடையாது, எனினும் அவற்றை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும்.
புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவு
அதிக புரதச்சத்து கொண்ட உணவை உட்கொள்வது எடை இழப்பிற்கான கருவியாக இருக்கும். இது மெலிந்த தசைகளை உருவாக்குவதற்கும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இதனல் நீங்கள் ஜிம்மிற்குச் செல்லாமல் இருந்தால் கூட எடை அதிகரிக்காது. அதேபோல் கரையாத நார்ச்சத்து செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு மற்றும் பல நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.\
மேலும் படிங்கFasting Benefits : விரதம் இருப்பது நல்லதா ?
வீடே உடற்பயிற்சி கூடம்
வீட்டிற்குள்ளேயே இருப்பது கூட உங்களுக்கு சில சமயம் மகிழ்ச்சியை தரலாம். ஆனால் வீட்டை விட்டு வெளியேற சோம்பேறியாக இருந்தால் அது உங்களை முடக்கிவிடும். எனவே வீட்டின் படிக்கட்டுகளில் ஓடுவது அல்லது நடப்பது நல்ல உடற்பயிற்சியாகும். ஒரு நடனப் பிரியர் அல்லது தற்காப்புக் கலைகளை விரும்புபவர் அல்லது யோகா செய்வதை விரும்புபவராக இருந்தால் எங்கும் வெளியே செல்ல வேண்டியதில்லை நீங்கள் வீட்டிலேயே இந்தச் செயல்பாடுகளை அனுபவிக்கலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation