இன்றைய இளைய தலைமுறையினருக்கு மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி புரிவதில்லை. நீங்கள் கொஞ்சமாக மது அருந்தினால் சிக்கல் கிடையாது. ஆனால் அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் ஏடா கூடமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏனென்றால் செரிமான அமைப்பு மூலம் இரத்தத்தில் மது விரைவாக உறிஞ்சப்படுகிறது. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க கொஞ்சம் மது அருந்தினால் உடலுக்கு பெரும் தீங்கு ஏற்படாது. அடிக்கடி அதிகளவு மது அருந்தினால் நிலைமை தலைகீழாகி விடும்.
போதை கிடைப்பதற்கு தொடர்ந்து குடித்து கொண்டே இருந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். குடிப்பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாக இருந்தாலும், இல்லையென்றாலும் அது நிச்சயம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதற்கான காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நீங்கள் குடிக்கும் மதுவில் கலோரிகள் நிறைந்துள்ளன. ஒரு கிராம் மதுவில் ஏழு கலோரி உள்ளது. ஒவ்வொரு மதுபானத்தில் 100க்கும் மேற்பட்ட கலோரிகள் உள்ளன. அதிகமாக குடிக்கும் போது உடல் பருமன் அல்லது குறிப்பிடத்தக்க எடை அதிகரிப்புக்கு ஆளாகிறீர்கள்.
கல்லீரல் சேதம்
உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதே கல்லீரலின் அடிப்படை வேலையாகும். நீங்கள் அருந்தும் மது உடலுக்கு நச்சு என்பது உணர வேண்டும். கொஞ்சமாக குடிக்கும் போது கல்லீரல் அதை எதிர்த்துப் போராடும். ஆனால் அதிகளவு மது அருந்தினால் சிரோசிஸ் போன்ற பிரச்சினை ஏற்படும். மது அருந்துவதால் கல்லீரல் செல்கள் இறப்பதற்கு இதுவும் காராணம். அதிகமாக குடிக்கும் போது கல்லீரல் கொழுப்பு நோயும் வரும். அப்படி வந்துவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து என அர்த்தம்.
மேலும் படிங்கNew Year Resolution 2024 : புத்தாண்டில் மன ஆரோக்கியத்திற்கான முக்கிய தீர்மானங்கள்
மோசமடையும் நோய் எதிர்ப்புச் சக்தி
தினந்தோறும் மது அருந்திக் கொண்டே இருந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்படும். உங்களின் உடல் நோய்களின் இலக்காக மாறிடும். குடிக்காத நபர்களை விடக் குடிக்கும் நபர்கள் காசநோய் மற்றும் நிமோனியா போன்ற நோய்களால் எளிதில் பாதிக்கப்படுவர்.
வாழ்க்கை தரம் குறையும்
நீண்ட காலத்திற்கு மது அருந்திக் கொண்டே இருந்தால் மனநல கவலைகள் உண்டாகும். குடிப்பழக்கத்தை தவிர்த்தால் மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். அதிகப்படியாக மது அருந்தி மூளை மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டால் ஒரு நபரின் வாழ்க்கைத் தரம் கடுமையாகப் பாதிக்கப்படும். மது அருந்துதல் என்பது மனச்சோர்வை ஏற்படுத்தும் மருந்தாகும்.
மேலும் படிங்க“Superfoods” : கருவுறுதலை எளிதாக்கிடும் சூப்பர் ஃபுட்ஸ்
இதய ஆரோக்கியத்தில் பாதிப்பு
இதயத்தின் செயல்பாட்டை மது கடுமையாக பாதிக்கும். ஒரு முறை மது அருந்தினால் கூட அரித்மியா, கார்டியோமயோபதி, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. சில சமயங்களில் கொஞ்சம் மது அருந்தினால் இதயத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும். இதய ஆரோக்கியத்திற்காக நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம் அல்லது ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation