தேன் இயற்கையாக இனிப்பு சுவை கொண்ட ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் திரவம் ஆகும். இதில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். பெரும்பாலான மக்கள் தங்கள் எடை இழப்பு தேன் ஒரு சிறந்த பொருளாக பயன்படுத்து கொள்கின்றனர். தேன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது முதல் செரிமான ஆரோக்கியம் வைத்திருப்பது போன்ற அனைத்தையும் கவனித்துக்கொள்ள உதவுகின்றது. தேனில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றதா எனறால் சந்தேகமின்றி அது உண்மை, ஆனால் அதை சரியாக உட்கொள்ளும்போதுதான் அதன் முழு பலன்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க: ஒரு சிட்டிகை ஜாதிக்காய் கலந்த தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்
ஆதே போன்று தேனை எல்லாவற்றிலும் சாப்பிட முடியாது. சில உணவுப் பொருட்களுடன் தேனை கலந்து சாப்பிட்டால் அவை விஷமாக செயல்படுகின்றன. எனவே இன்று இந்த கட்டுரையில் தேனுடன் சாப்பிடக்கூடாத சில மோசமான உணவுக் கலவைகளைப் பார்க்கலாம்.
பெரும்பாலான மக்கள் எடை இழப்பிற்கு சூடான அல்லது கொதிக்கும் நீரில் தேன் கலந்து குடிக்கிறார்கள். இதுபோன்ற செய்வதால் தேன் நச்சுத்தன்மை நடைகின்றது, அதுமட்டுமின்றி செரிமான பிரச்சினைகள், வளர்சிதை மாற்ற ஏற்றத்தாழ்வுகள், காலப்போக்கில் பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. நீங்கள் சூடான அல்லது கொதிக்கும் நீரில் ஒருபோதும் தேனைக் கலக்க வேண்டாம். வெந்நீரைத் தவிர, சூடான பால், டீ அல்லது காபி ஆகியவற்றில் தேன் கலக்குவதையும் தவிர்க்க வேண்டும். அவற்றின் வெப்பநிலை காரணமாக தேன் தீங்கு விளைவிக்கும்.
அசைவப் பொருட்களுடன் குறிப்பாக மீன் மற்றும் இறைச்சியுடன் தேன் சாப்பிடக்கூடாது. உண்மையில் தேனும் இறைச்சியும் வெவ்வேறு செரிமானத் தேவைகளைக் கொண்டுள்ளன, இவற்றை ஒன்றாகச் சாப்பிடும்போது செரிமான அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக அஜீரணம், வீக்கம் மற்றும் அசௌகரியம் போன்ற செரிமான பிரச்சனைகள் இருக்கலாம். அசைவ உணவுகள் மற்றும் தேன் உட்கொள்வதற்கு இடையில் எப்போதும் குறைந்தது ஒரு மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.
புளித்த உணவுடன் தேனையும் தவிர்க்க வேண்டும். ஊறுகாய், தயிர் அல்லது கிம்ச்சி போன்ற புளித்த உணவுப் பொருட்களுடன் தேனை எடுத்துக் கொண்டால் அது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். புளித்த உணவுப் பொருட்களில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன மற்றும் தேனை விட வேறுபட்ட pH அளவு உள்ளது. எனவே அவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது செரிமான பிரச்சனைகள், வாயு அல்லது வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க: இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம், தோல் புற்றுநோயாக இருக்கலாம்
தேன் மற்றும் சோயாவின் உணவு கலவையும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. நீங்கள் ஒருபோதும் டோஃபு அல்லது சோயா பாலுடன் தேனை உட்கொள்ளக்கூடாது. சோயாவில் கால்சியம் போன்ற தாதுக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கக்கூடிய கலவைகள் உள்ளன, மேலும் தேனுடன் கலந்து எடுத்துக் கொள்ளும்போது வாயு அல்லது வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதே சமயம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]