பெண்களின் எலும்பு மற்றும் பற்கள் வலுபெற சாப்பிட வேண்டிய உணவுகள்

நீங்கள் உங்கள் எலும்புகள் மற்றும் பற்கள் இரண்டும் வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், இந்த 9 கால்சியம் நிறைந்த உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்...

  

foods for strong teeth

கால்சியம் நம் உடலுக்கு தேவையான மிகவும் முக்கியமான சத்தாகும். குறிப்பாக எலும்புகள், தசைகள் மற்றும் பற்களின் வலிமைக்கு அதிக தேவையான சத்து கால்சியம். உடலில் சில நொதிகள் மற்றும் ஹார்மோன்கள் உள்ளன, அவற்றின் வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் தேவைப்படும். குழந்தை, முதியவர் அல்லது சிறியவர் என ஒவ்வொரு வயதினருக்கும் இது அவசியம் தேவைப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு, கால்சியம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஒரு வயதுக்கு பிறகு பெண்களின் உடலில் கால்சியம் சத்தின் குறைபாடு தொடங்குகிறது.

மாதவிடாய் காலங்களில், பிரசவம் நேரங்களில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் நாட்களுக்கு பிறகு பெண்களின் உடலில் கால்சியம் குறையத் தொடங்குகிறது. அப்படிப்பட்ட தேவை மிகுந்த கால்சியம் நிறைந்த உணவுகள் மற்றும் கால்சியம் குறைபாட்டை நீக்கும் உணவுகள் பற்றி இன்று நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம்.

நிபுணர் கருத்து

ஊட்டச்சத்து நிபுணர் கவிதா கூறுகையில், “பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல இயற்கை நிகழ்வுகளான மாதவிடாய் வருவது, கர்ப்பம் தரிப்பது, தாய்ப்பால் கொடுப்பது மற்றும் மாதவிடாய் நிறுத்தம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களுக்கு நல்ல உணவு மற்றும் அதிக கால்சியம் தேவைப்படுகிறது. மாதவிடாய் நின்ற பிறகு, பெண்களின் உடலில் கால்சியம் குறையத் தொடங்குகிறது. ஆண்களை விட பெண்களுக்கு அதிக கால்சியம் தேவைப்படுகிறது, ஏனெனில் அவர்கள் அவரவர் வயதுக்கு ஏற்ப ஏதாவது ஒரு எலும்பு பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள்.

பால் மற்றும் அதன் பொருட்கள்

இது கால்சியத்தின் சிறந்த மூல ஆதாரமாக இருக்கிறது. அதனால் தான் தினமும் பால் அருந்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஒரு கப் பாலில் சுமார் 300 கிராம் கால்சியம் உள்ளது. பால் பற்றாக்குறையால் உடலில் கால்சியம் குறைபாடு எவ்வளவு ஏற்படுகிறது என்று தெரியுமா? கால்சியம் தட்டுப்பாடு தான் பற்கள் உடைந்து விழுவதற்கும், எலும்புகள் பலத்தை இழப்பதற்கும் காரணம் ஆகும். பன்னீர் மற்றும் தயிர் போன்ற பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களிலும் நிறைய கால்சியம் உள்ளது, எனவே இவற்றை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள். தயிரில் கால்சியம் சத்து அதிகம் இருப்பது மட்டுமல்லாமல்,அது நம் உடலை தொற்றுநோயிடம் இருந்தும் பாதுகாக்கிறது.

அத்திப்பழம்

அத்திப்பழம் கால்சியத்தின் நல்ல மூலம். அதனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், எலும்புகள் தொடர்பான நோய்கள் நீங்கி விடும், அதே போல் இது எலும்புகளை பலமாக வைக்க உதவுகிறது. அத்திப்பழத்தில் பாஸ்பரஸ் உள்ளது. இந்த கனிமம் எலும்புகளின் பலத்தை மேம்படுத்துகிறது. 1 கப் அத்திப்பழத்தை சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு சுமார் 240 மில்லிகிராம் கால்சியம் கிடைக்கிறது. இது தவிர, நார்ச்சத்து, வைட்டமின் k மற்றும் பொட்டாசியம் ஆகியவை இதில் காணப்படுகின்றன. அத்திப்பழத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளும் நீங்குகிறது.

தக்காளி

தக்காளியில் வைட்டமின்-k உள்ளது மற்றும் இது கால்சியத்தின் நல்ல மூல காரணியாகும். அதனால் தினமும் தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி எலும்புகளை வலுவாக்குவது மட்டுமல்லாமல், அது உடலில் உள்ள கால்சியம் குறைபாட்டையும் தீர்த்து விடுகிறது.

ப்ரோக்கோலி

calcium foods in tamil

ப்ரோக்கோலி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள்,பெண்கள் என அனைவரும் சாப்பிட வேண்டிய காய்கறி. ஏனெனில் பால் மற்றும் சோயாபீனுக்கு அடுத்தபடியாக எந்த உணவில் அதிக கால்சியம் உள்ளது என்று கேட்டால், அது ப்ரோக்கோலி மட்டுமே என்று தாராளமாக சொல்லலாம். கால்சியத்தை தவிர இதில் ஜிங்க், பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் B-6, வைட்டமின்-E, மக்னீசியம், குளோரின், வைட்டமின் B-1 மற்றும் கரோட்டின் வடிவில் வைட்டமின்-A ஆகியவை இதில் உள்ளன.

சீஸ்

சீஸில் கால்சியம் நிறைந்துள்ளது, எனவே அதை தினமும் சாப்பிடுங்கள், ஆனால் அதை குறைவான அளவு தான் உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், இல்லையெனில் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். அனைத்து வகையான சீஸிலும் கால்சியம் நிறைந்துள்ளது, எனவே நீங்கள் எந்த வகையான சீஸ் விரும்பினாலும் அதை சாப்பிடலாம்.

எள் மற்றும் ராகி

எள்ளிலும் கால்சியம் உள்ளது. தினமும் 1 ஸ்பூன் எள்ளுடன் 1 கப் பால் கலந்து குடித்து வந்தால் கால்சியம் குறைபாடு குணமாகும். இது தவிர ராகியிலும் கால்சியமும் அதிகம் உள்ளது. இது எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்கிறது.

பாதம் பருப்பு

பாதாம் கால்சியத்தின் சிறப்பான மூலமாகும். பாதாம் மூளையை கூர்மையாக்குவது மட்டுமின்றி எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்துகிறது மற்றும் தசைகளையும் ஆரோக்கியமாக வைக்கிறது. மற்ற சத்துக்களும் இதில் உள்ளன. கால்சியம் பற்றாக்குறையை போக்க, பாதாம் பருப்பை ஒரு டம்ளர் பாலுடன் அரைத்து தினமும் குடித்து வர வேண்டும் அல்லது தினமும் 5 பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும்.

பசலை கீரை

பசலைக்கீரையிலும் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் கீரையில் 99 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்க வாரத்திற்கு 3 முறையாவது பசலை கீரையை சாப்பிடுங்கள். பச்சைக் காய்கறிகளை உட்கொள்வதால், எலும்புகள் வலுவடைந்து, பலமாவது மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதுவும் உதவலாம் :சில காய்கறிகளை தோலோடு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

சோயாபீன்

high calcium foods

சோயாபீனில் பாலுக்கு இணையான கால்சியம் சத்து இருப்பதால், பாலுக்கு மாற்றாகவும் இதை உட்கொள்ளலாம். அதாவது பால் குடிக்க பிடிக்காத பெண்கள், சோயாபீன்ஸை தினமும் சாப்பிட்டு வந்தால், அவர்களின் எலும்புகள் பலவீனமாகாது.

இது தவிர, கால்சியம் நிறைந்த சில மசாலாப் பொருட்களும் உள்ளன. பல பெண்களுக்கு இது தெரியாது. ஆனால் அவற்றை தொடர்ந்து உட்கொண்டால், கால்சியம் குறைபாட்டை எளிதில் நீக்கி விடலாம். சீரகம், கிராம்பு, கருப்பு மிளகு மற்றும் செலரி இவையே கால்சியம் நிறைந்த மசாலாப் பொருட்கள் ஆகும்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP