சில காய்கறிகளை தோலோடு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

நீங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருபவராக இருந்தால், இந்த காய்கறிகளை தோல் உரிக்காமல் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்...

 
vegetable peels benefits in tamil

சில காய்கறிகளை தோல் நீக்காமல் செய்ய முடியாது என்று நினைத்து கொள்வோம், ஆனால் அனைத்து காய்கறிகளையும் தோலுரித்த பிறகு உணவில் பயன்படுத்துவது தவறு. தோல் உரிக்காமலேயே உணவில் சேர்க்கக்கூடிய பல காய்கறிகள் உள்ளன.

பல காய்கறிகளை தோலுரித்த பிறகு, அவற்றில் உள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகின்றன, எனவே நிபுணர்களும் அவற்றை உரிக்காமல் உணவில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள், ஏனெனில் அதன் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உடலுக்கு மிகவும் பயனுள்ள ஊட்டச்சத்துக்கள் ஆகும். தோல் உரிக்காமல் சமைக்கும் போது நம் ஆரோக்கியத்திற்குபல நன்மைகளை கொடுக்கும்.

நூக்கல்

சிலர் தங்கள் உணவில் நூக்கலை காய்கறியாகச் செய்வதை நீங்கள் பார்த்திருக்க கூடும். நூக்கல் முற்றிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய் வகை. இதில் உள்ள நார்ச்சத்தானது உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மைகள் செய்கிறது. பல நிபுணர்கள் கூற்றுப்படி, நூக்கல் இரத்த அழுத்தக் குறைபாட்டை நீக்குகிறது என்று கூறுகிறார்கள், ஆனால் வேறு சில நிபுணர்கள் தோலுரித்த நூக்கலை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது என்று கூறுகிறார்கள். எனவே நூக்கலை தோலோடு சமைக்க வேண்டும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை தோலுரித்தால், தோலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நீக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. அதன் தோலில் பல நொதிகள் காணப்படுகிறது, அவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் கூறப்படுகிறது. சில நேரங்களில் மருத்துவர்களும் வெள்ளரியை தோலுடன் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். அதனால் அடுத்த முறை நீங்கள் தோலுரித்த வெள்ளரிக்காயை சாப்பிட நேரும் போதெல்லாம், தோல் நீக்கிய வெள்ளரிக்காய் சாப்பிடுவது எவ்வளவு சரியானது என்று சிந்தியுங்கள்.

சுரைக்காய்

bottle gourd skin benefits

சுரைக்காயில் பல்வேறு சத்துக்கள் இருப்பதாகவும், அவற்றை சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை பயக்கும், ஆனால் அதை தோலுரிப்பதால் பல சத்துக்கள் அழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சில சமயங்களில் சுரைக்காயிலிருந்து தயாரிக்கப்பட்ட சாறைக் குடிக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இதுவும் உதவலாம்:நீங்கள் அறிந்திடாத சுக்கின் ஆரோக்கிய நன்மைகள்

பீட்ரூட்

beetroot skin benefits

பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் C போன்ற ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்து தான் பீட்ரூட் ஆகும். பெரும்பாலானவர்கள் இதை சாலட் ஆகவும், கூழாகவும் அல்லது காயாகவும் சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் பொதுவாக அனைவருமே பீட்ரூட் தோலை உரித்த பிறகே சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் தோலுரித்த பீட்ரூட் சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும் என்ற தகவலை நாங்கள் உங்களிடம் தெரிவித்து கொள்ள விரும்புகிறோம். அதனால் இதை நன்கு சுத்தம் செய்து விட்டு சமைக்கலாம். பீட்ரூட் தோலில் உள்ள சத்துக்கள் ஆனது நம்முடைய செரிமான சக்தியை சீராக வைப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP