சத்துகள் நிறைந்த நெல்லிக்காயை ஈசியா உணவில் சேர்த்துக்கொள்ள 5 வழிகள்

ஆரோக்கியமான வாழ்விற்கு நெல்லிக்காயை பல வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சரியான முறையில் எடுத்துக்கொள்வது பல நன்மைகளை அளிக்கும்.

big image amla

ஆரோக்கியமாக வாழ்க்கைக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது மிக முக்கியம். நாம் சாப்பிடும் உணவுகளை வைத்து உடலிலும் முகத்திலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் நம்மை நோயுறச் செய்யும் மற்றும் முகத்தின் பொலிவை குறைக்கும். அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவு நம்மை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. உடல் நலனுக்கு மிக சிறந்த நெல்லிக்காயை பல வழிகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சரியான முறையில், சரியான நேரத்தில் மற்றும் சரியான அளவில் எடுத்துக்கொள்வது பல நன்மைகளை அளிக்கும். இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா விரிவான தகவல்களை அளித்துள்ளார்.

மேலும் படிக்க:ராகி சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

amla inside

நெல்லிக்காயின் பண்புகள் (நெல்லிக்காயை உட்கொள்ளும் வழிகள்)

நெல்லிக்காய் வயதை குறைத்து இளமையை தக்கவைக்க உதவுகிறது. இது முகத்தில் தெரியப்படும் வயதான அறிகுறிகளைத் தடுக்கவும், முடி நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது. இது இனப்பெருக்க அமைப்புக்கும் மிகவும் நல்லது. நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் வயிறு தொடர்பான பிரச்சனைகளையும் நீக்குகிறது.

நெல்லிக்காயை உணவில் சேர்த்துக்கொள்ளும் வழிகள்

amla inside

  • 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
  • வெறும் வயிற்றில் 20 மி.லி. நெல்லிக்காய் சாறு எடுத்துக்கொள்வதும் பல நன்மைகளை தரும்.
  • நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் சியாவன்ப்ராஷ் தினமும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து எடுத்துக் கொள்வது நல்லது.
  • நெல்லிக்காயில் தயாரிக்கப்படும் ஜாம் மற்றும் ஊறுகாயையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
  • நெல்லிக்காய் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் ஆவி கட்டி, பின் சூரிய ஒளியில் உலர்த்தி, சேமித்து வைத்து கொண்டு தினமும் 2 துண்டுகள் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க:உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுங்க! உடலுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும்

ஆரோக்கியமாக இருக்க, வல்லுநர்கள் பரிந்துரைத்தபடி நெல்லிக்காயை சாப்பிடுங்கள். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கதைகளைப் படிக்க, Herzindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit- freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP