Clove Tea: மாதவிடாய் வலியைப் போக்கும் சூப்பர் பானம் இது தான்!

கிராம்பு பல்வலியைக் குறைக்கவும், செரிமானப் பிரச்சனைகளைப் போக்கவும், மாதவிடாய் பிடிப்புகள் உட்பட பல வகையான வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

benefits of  clove tea

எதையும் தாங்கும் வலிமைக் கொண்டவள் பெண் என்ற கூற்றிற்கு இணங்க தங்கள் வாழ்நாள் முழுவதும் மனதளவிலும், உடல் அளவிலும் பல்வேறு இன்னல்களைச் சந்திப்பவர் பெண். எத்தனையோ வலிகள் வந்தாலும் அசால்டாக சந்தித்தாலும் மாதம் மாதம் வருகின்ற மாதவிடாய் வலி சில பெண்களைப் பாடாய்ப்படுத்திவிடும். நாள் முழுவதும் தூங்கிக் கொண்டே இருக்க வேணடும் என்ற எண்ணமும் ஏற்படும். இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு வலி மற்றும் பிடிப்புகள் ஏற்பட்டால், கிராம்பு டீயை வீட்டிலேயே தயாரித்து உடனடி நிவாரணம் பெற முடியும். இதோ எப்படி என்பது குறித்த முழு விபரம் இங்கே.

list of benefits for clove tea

மாதவிடாய் வலியைப் போக்கும் கிராம்பு:

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், வயிற்றுப் பிடிப்புகளுடன் இடுப்பு, முதுகு, கால்கள் மற்றும் அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படுவது இயல்பான ஒன்று. இதோடு சில பெண்களுக்குத் தங்கள் அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத அளவுக்கு வலியை உணரக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் பெற பெண்கள் இயற்கை வைத்தியம் பார்க்கிறார்கள். அத்தகைய பெண்களுக்கு, கிராம்பு நுகர்வு சிறந்த இயற்கை வலி நிவாரணியாக இருக்கும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, கே, மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்து போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் வலியைப் போக்குவதற்கு உதவியாக இருக்கும்.இதோ கிராம்பு டீ எப்படி செய்வது என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

கிராம்பு டீ செய்முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் 3 அல்லது 4 கிராம்புகளைச் சேர்ந்து கொதிக்க விடவும். பின்னர் பாதியாக தண்ணீர் குறையும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு அப்படியே குடிக்க பிடிக்கவில்லையென்றால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதை தொடர்ச்சியாக மாதவிடாய் காலத்தில் மட்டுமல்ல, அடிக்கடி குடித்து வரும் போது மாதவிடாய் காலத்தில் இனி வயிற்று வலி உள்பட எவ்வித தொந்தரவுகள் ஏற்படாது. அப்புறம் என்ன மாதவிடாய் பிடிப்புகளில் இருந்து விடுபட கிராம்பு டீயையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள மறந்துவிடாதீர்கள்.

period cramps

கிராம்பு பல்வலியைக் குறைக்கவும், செரிமானப் பிரச்சனைகளைப் போக்கவும், மாதவிடாய் பிடிப்புகள் உட்பட பல வகையான வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கவும் கிராம்பை இனி உங்களது உணவு முறையில் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்.

மேலும் படிங்க:பீட்ரூட்டில் கொட்டிக் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

Image source- Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP