herzindagi
reduce weight loss tips

Weight Loss Tips: உடல் பருமன் பிரச்சனையா? ஒரே மாதத்தில் குறைப்பதற்காக வழிமுறைகள் இது தான்!

<span style="text-align: justify;">உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால், சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.</span>
Editorial
Updated:- 2024-02-16, 15:07 IST

குண்டான உடம்பை எப்படி குறைப்பது என்ற தேடலில் ஈடுபடும் பெண்களில் ஒருவராக நீங்கள்? அப்படின்னா கொஞ்ச நேரம் ஒதுக்கி இந்த கட்டுரையைக் கொஞ்சம் வாசித்துட்டுப் போங்க. ஆம் இன்றைய பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் எடை அதிகரிப்பு. புடவைக் கட்டினாலும், சுடிதார் மற்றும் மாடர்ன் உடைகள் என எதை உடுத்தினாலும் குண்டாக இருக்கும் பெண்களுக்கு நாம் அழகாக இருக்கிறோமா? என்ற சந்தேகம் ஏற்படும். இதோடு மற்றவர்கள் நம்மைப்பார்த்து என்ன சொல்வார்கள்? என்ற குழப்பமும் ஏற்படும். இதற்குத் தீர்வு காண்பதற்கான உடல் எடையைக்குறைப்பு குறித்த எளிய வழிமுறைகளை இங்கே உங்களுக்காகப் பகிர்கிறோம்.

weight reduce

எடைக்குறைப்பதற்கான வழிமுறைகள்:

  • வீட்டில் சமைக்கும் உணவுகள் வீணாகக்கூடாது என்பதற்காக, மீதமுள்ள அனைத்துப் பொருள்களையும் சாப்பிடும் பழக்கம் பெண்களுக்கு அதிகளவில் உள்ளது. இதுவே அவர்களின் உடல் எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே அளவுக்கு அதிகமாக சமைக்கக்கூடாது. போதுமான அளவிற்கு சமைத்தாலே போதும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: பீட்ரூட்டில் கொட்டிக் கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

  • பெண்களுக்கு நிறைய சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதனால் உடல் எடை அதிகரிக்காது. ஆனால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால், சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். காலை உணவை 8 மணிக்குள், மதியம் 1 மணி மற்றும் இரவு 7 க்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இந்நேரத்தில் அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்து மற்ற உணவுகளை நீங்கள் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • நடைபயிற்சி, ஜாகிங், குத்துச்சண்டை, பைக்கிங் மற்றும் நீச்சல் போன்ற கார்டியோ பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பயிற்சிகள் உங்களது கலோரிகளை எளிதில் எரித்து, உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும்.
  • அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும் என்றால், தினசரி நடைப்பயிற்சியைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். உங்களால் வெளியில் சென்று வாக்கிங் மேற்கொள்ள முடியவில்லை என்றாலும், மாடி படிகட்டுகளில் தினமும் ஏறி இறங்க வேண்டும். கடைகளுக்குச் சென்றாலும் இருசக்கர வாகனத்தில் செல்வதைத் தவிர்த்து விட்டு நடந்து செல்வதற்கு முயற்சி செய்யவும்.

weight loss diet

  • பெண்களுக்கு முறையான தூக்கமின்மையும் உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என்பதால் சரியான நேரத்தில் தூங்க வேண்டும். இரவு 9 மணிக்குள் தூங்குவது நல்லது. முறையான தூக்கம் இல்லாதது உங்களின் செரிமானத்தைப் பாதிப்பதால் உடலில் தேவையில்லாத கலோரிகள் சேர்வதற்கு வழிவகுக்கும்.
  • உடல் எடையை சரியான அளவில் நிர்வகிக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உங்களது உணவு முறையில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதோடு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க அதிகளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • மன அழுத்தமும் உடல் எடையை அதிகரிக்கும் என்பதால், முடிந்தவரை மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். குறிப்பாக தியானம், யோகா, பாடல்கள் கேட்பது  போன்ற செயல்களில் ஈடுபடவும். 

மேலும் படிக்க: பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தா உடனே நிறுத்திடுங்க!

Image Source - Google                                                                                            

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]