herzindagi
peanut butter site image

Peanut Butter: உடல் ஆரோக்கியமாக இருக்க பீனட் பட்டரை இப்படி தேர்வு செய்ய வேண்டும்!!

பீனட் பட்டரில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. ஆனாலும் தேர்வு செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். அவற்றிலும் சில குறைப்படுங்கள் உள்ளன. 
Editorial
Updated:- 2023-08-23, 17:41 IST

பீனட் பட்டரில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன. பீனட் பட்டரில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி3, வைட்டமின் பி6, ஃபோலேட், தாமிரம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் செலினியம் ஆகியவற்றில் காணப்படுகிறது. பீனட் பட்டர் எடை இழப்பு மற்றும் எடை அதிகரிப்பு ஆகிய இரண்டிற்கும் பயன்படுகிறது. ஆனால் அதைத் தேர்ந்தெடுத்து உண்ணும் முறை வேறுபடுகிறது. நீங்கள் பீனட் பட்டரை சரியான முறையில் தேர்வு செய்தால் அதன் பலனை பெறுவீர்கள். மேலும் அதில் உள்ள சத்துக்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். உணவியல் நிபுணர் ராதிகா கோயல் இதைப் பற்றி விரிவாக கூறியுள்ளார். 

 

 இந்த பதிவும் உதவலாம்:  வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை குறைக்க தங்க நிறப் பால்!!

சரியான பீனட் பட்டரை தேர்வு செய்வது எப்படி?

peanut butter site

  • நீங்கள் பீனட் பட்டரை தேர்வு செய்யும் போது அதில் சர்க்கரை தனியாக சேர்க்க கூடாது. வேர்க்கடலையில் இருக்கும் சர்க்கரையே அதற்கு போதுமானதாக இருக்க வேண்டும். இதற்க்காக செயற்கை சர்க்கரை அதில் தனியாக சேர்க்க கூடாது. இப்படி தேர்வு செய்தால் இதில் இருக்கும் அனைத்து பலன்களை பெறலாம்.
  •  பீனட் பட்டரில் செயற்கையான உப்பை சேர்க்க கூடாது. வேர்க்கடலையில் போதுமான உப்பு மற்றும் மொறுமொறுப்பான தன்மை இருக்கும்.  பின் சோடியம் அதிகமாக இருக்ககூடாது. வேர்க்கடலையில் போதுமான அளவு வெண்ணெய் அதில் காணப்படுகிறது. அகையால் அதில் அதிகாம வெண்ணெயை சேர்க்கக்கூடாது. அப்படி செய்தால் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
  •  வேர்க்கடலை வெண்ணெயுடன் பேரீச்சம்பழம் அல்லது சாக்லேட் எடுத்துக் கொள்ளலாம். அதன் அளவிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 

 

வேர்க்கடலை வெண்ணெய் நன்மைகள் மற்றும் தீமைகள்

 

peanut butter site

  • நீங்கள் சர்க்கரை சேர்க்காத வேர்க்கடலை வெண்ணெயை உட்கொண்டால் இதயம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது.
  •  ஒரு  நாள் முழுவதும் போதுமான ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி வயிற்றுக்கும் நல்லது.
  •  யூரிக் அமிலம் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகள் இருந்து அவற்றை சாப்பிட்டால் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
  •  வயிறு உப்புசம் உள்ளவர்களும் இதனை வரம்பிற்குள் பயன்படுத்த வேண்டும்.

 

இந்த பதிவும் உதவலாம்: மது அருந்தும்போது சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Image Credit- Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]