உடல் எடை குறைய எவற்றை எல்லாம் சாப்பிடக் கூடாது என்று யாரிடமாவது கேட்டால், அவர்கள் ஒரு பெரிய பட்டியலையே நமக்குக் கொடுப்பார்கள். எவற்றை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று கேட்டால், ஒரு சில விருப்பப்படாத உணவு வகைகளைச் சொல்வார்கள். ஆனால் உடல் எடை குறைக்க விருப்பமில்லாத உணவுகளைத் தான் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை. ஊட்டச்சத்து நிறைந்த சில உணவு வகைகளும் உடல் எடையைக் குறைக்கும் வேலையைச் செய்கிறது. அப்படி ஒரு உணவுப் பொருள் தான் கொண்டைக்கடலை.
உங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் கொண்டைக்கடலை எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கிறது தெரியுமா?
உடல் எடை குறைப்பு நிபுணர், டாக்டர் ஸ்நேஹல் அல்சூல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடை குறைப்பு சம்பந்தப்பட்ட குறிப்புகள் மற்றும் உணவு செய்முறையைப் பகிர்கிறார். அவர் கொண்டைக்கடலையைச் சிற்றுண்டியாக எடுக்கப் பரிந்துரைக்கிறார். அவர் தனது பக்கத்தில், 'இது ஒரு உகந்த சிற்றுண்டி, இதை நீங்கள் மசாலாக்கள் சேர்த்துச் சாப்பிடலாம். குளிர் காலத்தில் பசிக்கும் நேரத்தில், இதைச் சிற்றுண்டியாகச் செய்து சாப்பிட உடல் எடை குறையும். இந்த கட்டுரையை முழுமையாகப் படிக்க கொண்டைக்கடலையை எப்படி நம் உடல் எடையைக் குறைக்கிறது, அதை உணவில் எப்படிச் சேர்த்துக் கொள்ளுவது என்பது புரியும்.
இதுவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
கொண்டைக்கடலையை அடிக்கடி உட்கொள்ளுபவர்களில் 53% பேர் உடல் எடை கச்சிதமாகவும், சரியான உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஒரு எடை குறைப்பு ஆய்வு கூறுகிறது. தொடர்ந்து கொண்டைக்கடலையை உட்கொள்ளுபவர்களுக்கு 25% உடல் எடை சீராகக் குறைக்கிறது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.
உணவில் கொண்டைக்கடலை சேர்ப்பது மிகவும் நல்லது. மேற்கண்டபடி கொண்டைக்கடலை புரதச்சத்து நிறைந்தது, அது எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் தசை வளர்ச்சிக்கும் புரதச்சத்து மிகவும் தேவையானது. கொண்டைக்கடலையில் இருக்கும் நார்ச்சத்து நீண்ட நேரம் நமக்குப் பசி எடுக்காமல் வைக்கிறது. செரிமான தன்மையை அதிகரிக்கிறது. உங்களுடைய கொலஸ்ட்ரால் அளவை சீராக வைக்க இது உதவுகிறது.
கொண்டைக்கடலை எவ்வளவுக்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவு தீங்கு நிறைந்ததும் கூட. தினமும் தவறாமல் இதை உண்பது ஆரோக்கியம் ஆனது அல்ல. அதிகப்படியாக இதில் இருக்கும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து செரிமான தன்மையைப் பாதித்து வாய்வு, வயிறு உப்புசம், வயிற்றுப் புண் ஆகியவற்றை உண்டாக்கும்.
நாம் நாள் முழுவதும் சாப்பிடக் கூடிய சிற்றுண்டியாக கொண்டைக்கடலை ஆகிவிட்டது. மாலை நேரத்தில் பசி எடுக்கும் போது 1 கப் கொண்டைக்கடலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சில நேரங்களில் இரவு உணவு சாப்பிட்டால் வயிறு நிறைந்து திணறி விடும். அந்த சமயத்தில் அரை கப் கொண்டைகடலை பசியைத் தணிக்க போதுமானது.
இதை உணவில் பல வகைகளில் சேர்க்கலாம். நீங்கள் இதில் ஹம்மூஸ் செய்து சாப்பிடலாம் அல்லது இதை வேக வைத்துச் சாப்பிடலாம். டாக்டர் ஸ்நேஹல் பரிந்துரைத்தபடி இதை வறுத்துச் சாப்பிடலாம். இதைச் சிற்றுண்டியாக சாப்பிட ஒரு சிறந்த வழி இருக்கிறது.
இதுவம் உதவலாம்:உடல் எடையை குறைக்க உதவும் ப்ளூ டீ
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]